இடையியல்281

சூ. 254 :

விழைவே காலம் ஒழியிசைக் கிளவிஎன்று

அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே 

[5]
 

க-து :

தில்    என்னும்   இடைச்சொல்லின்   பொருட்குறிப்பு  இவை
என்கின்றது.
 

உரை : தில்  என்னும்  இடைச்சொல்  விழைவும்,  காலமும்,  ஒழிந்து
நிற்கும்  சொற்பொருண்மையும்    என்று    சொல்லப்பட்ட   அம்மூன்று
பொருட்கூறுபாட்டினை உடையதென்று கூறுவர் புலவர்.
 

எ-டு : சின்மொழி   அரிவையைப்  பெறுகதில்  அம்மயானே :   இது
பெறுதல்  வேண்டும்   என்னும்  விழைவு  குறித்து   நின்றது.  பெற்றாங்
கறிகதில்   லம்மவிவ் வூரே -  இது   காலங்குறித்து  நின்றது.  'வருகதில்
லம்மவெம்சேரிசேர'  -  இது  வரின்  இன்னது  செய்வல்  எனஒழியிசைப்
பொருண்மை குறித்து நின்றது.
 

சூ. 255 :

அச்சம் பயமிலி காலம் பெருமையென்று

அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே 

(6)
 

க-து:

'கொன்' என்பதன் பொருட்குறிப்பு இவை என்கின்றது.
 

உரை:'கொன்'  என்னும்   இடைச்சொல்    அச்சம்,    பயனின்மை,
காலம், பெருமை என்றுசொல்லப்படும் அந்நான்கு பொருட்  கூறுபாட்டினை
உடையதாம்.
 

எ-டு : கொன்முனை  யிரவூர்  (குறு-91)  கொன்னே  கழிந்தன்றிளமை
(நால - 55)   கொன்வரல்    வாடை    நினதெனக்    கொண்டேனோ -
கொன்னூர்   துஞ்சினும்   யாந்துஞ்   சலமே   (குறு - 138) எனமுறையே
அப்பொருள் நான்கினும் வந்தமை கண்டு கொள்க.
 

சூ. 256 :

எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை

முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று

அப்பால் எட்டே உம்மைச் சொல்லே

(7)
 

க-து:

உம்மை இடைச்சொல்லின் பொருட்குறிப்பு இவை என்கின்றது.
 

உரை:உம்  என்னும்   இடைச்சொல்   எச்சமும்,  (இழிவும் உயர்வும்
குறித்து வரும்)   சிறப்பும்,     ஐயமும்,     எதிர்மறையும்,  முழுமையும்,
எண்ணும், ஆய்வுநிலையும், ஆக்கமும் என்று சொல்லப்படும் அவ்  எட்டுப்
பொருட்கூறுபாட்டினையுடையதாம்.