282இடையியல்

எ-டு : 1) சாத்தனும்    வந்தான்,     இது     முன்னர்க்   கொற்றன்
வந்தமையைக்   குறித்து   நிற்றலின்    இறந்தது   தழுவிய  எச்சஉம்மை.
2)  யானைக்கும்  அடிசருக்கும்  என்பது  உயர்வு  சிறப்பும்மை. இவ்வூர்ப்
பூசையும் புலால்   தின்னாது   என்பது    இழிவுசிறப்பும்மை.   3) ஒன்று
இரப்பான்போல்   எளிவந்தும்     சொல்லும்,     உலகம்     புரப்பான்
போல்வதோர்   மதுகையு  முடையன்  வல்லாரை   வழிபட்  டொன்றறிந்
தான்போல்  நல்லார்கண்   தோன்றும்   அடக்கமுமுடையன் ... அன்னான்
ஒருவன்   (கலி-47)    இஃது   இன்னான்   எனத்  துணியப்படாமையின்
ஐயவும்மை.    4, மறப்பினும்    ஓத்துக்     கொளலாகும்    [குறள்-134]
என்புழி  மறத்தற்   கூடாது   எனப்   பொருள்  தந்து  நிற்றலின் இஃது
எதிர்மறையும்மை.    "மற்றது    தள்ளினும்      தள்ளாமை    நீர்த்து -
கற்றிலனாயினும்  கேட்க"  எனவருவனவும்   அது.  சாத்தன்   வருதற்கும்
உரியன்  என்பது  வாராமைக்கும்   உரியன்   எனப்பொருள்  தருமிடத்து
எதிர்மறையும்மை,  வந்து  உண்ணுதற்கும்  உரியன்  பேசுதற்கும்  உரியன்
எனப்    பொருள்தரின்     எச்சவும்மையாம்.    5) முத்தமிழுங் கற்றான்
என்பது  முற்றும்மை.  6)  நிலனும்   நீரும்   தீயும்   வளியும்  காயமும்
எனப்பூதமைந்து  என்பது   எண்ணும்மை 7)  இருநிலம்  அடிதோய்தலின்
திருமகளும்  அல்லள்,   அரமகளும்   அல்லள்  இவள்  யாராகும்;  என
ஆய்வின்கண்  வருதல்   தெரிநிலை  உம்மை.  ஆய்வின்பயன்   பின்னர்
மானிடமகளே  எனத்துணிதலாம் 8)   செந்தமிழால்  வையினும்  உவக்கும்
சேயோன்,  என்புழி வைதலை  வாழ்த்தாக  எண்ணிக்  கோடலின்  ஆக்க
உம்மையாம். "செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே" என்பதும் அது.
 

சூ. 257 :

பிரிநிலை வினாவே எதிர்மறை ஒழியிசை

தெரிநிலைக் கிளவி சிறப்பொடு தொகைஇ

இருமூன் றென்ப ஓகா ரம்மே

[8]
 

க-து:

ஓ  என்னும்  இடைச்   சொல்லின்    பொருட்குறிப்பு   இவை
என்கின்றது.
 

உரை:ஓ  என்னும்   இடைச்  சொல் ;  பிரிநிலையும்,  வினாவுதலும்,
எதிர்மறையும்,   ஒழியிசையும்,    தெரிநிலைச்    சொல்லும்,     சிறப்புப்
பொருள்தரும் சொல்லொடும் கூடி  அவ்ஆறு   பொருட்   கூறுபாட்டினது
என்று கூறுவர் புலவர்.
 

எ-டு : 1) யானோ   தேறேன்   அவர்    பொய்வழங்கலரே,  என்பது
பிறர்தேறின்  தேறுக   எனத்   தேறுவாரினின்று தன்னை வேறுபடுத்தலின்
பிரிநிலையாம்.  2) சாத்தன்  உண்டானோ?   என்பது   வினா   ஓகாரம்.
3) யானோ  கொள்வேன் - என்பது  கொள்ளேன்    என்னும்   பொருள்
தருதலின் எதிர்மறையாம்