வரும் பெயர்ச்செவ்வெண் இறுதியும் ஏகார இடைச் சொல்லானாகிய எண்ணின் இறுதியும் எவ்விடத்து வரினும் அவை தொகையின்றி நடவா. தொகை பெற்றே முடியும் என்றவாறு. யாவயின் என்றது வழக்கும் செய்யுளுமாகிய இடங்களை. |
எ-டு : "மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ ... ... ... ... ஆறுதலை யிட்ட அந்நா லைந்தும்" எனவும் உயர்திணை என்றா அஃறிணை என்றா ஆயிரெண் டென்ப திணைநிலை வகையே எனவும் படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசருள் ஏறு எனவும் தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே எனவும் வரும். |
இனிக் "கண் கால் புறம்அகம்" (வேற்-21) என்னும் சூத்திரத்துள் எனா என்பதும், "ஒப்பும் உருவும்" (பொருளி-53) என்னும் சூத்திரத்துள் என்றா என்பதும். "நிலப்பெயர், குடிப்பெயர்" (பெய-11) என்னும் சூத்திரத்துள் ஏகாரமும் தொகைபெற்றிலவால் எனின்? அவைமுறையே, அன்னபிறவும் எனவும் - எல்லாம் எனவும் அனைத்தும் எனவும் தொகைப் பொருண்மைத்தாகிய சொற்களைக் கொண்டு முடிந்தமையான் தொகைபெற்றனவேயாம். |
மற்றுச், செல்லல் இன்னல் இன்னா மையே (உரி - 6) எனச் செவ்வெண் தொகை பெற்றிலதால் எனின்? இன்னோரன்ன செய்யுள் விகாரத்தான் தொக்கன எனவே படும். என்னை? "யாவயின் வரினும் தொகையின் றியலா" என ஆசிரியர் யாப்புறுத்தமையான் என்க. |
சூ. 292 : | உம்மை எண்ணின் உருபுதொகல் வரையார் |
(43) |
க-து: | உம்மை எண்ணின்கண் வேற்றுமை உருபு தொக்கும் வருமென்றது. |
|
உரை:எண்ணும்மையின்கண் வேற்றுமை உருபு தொக்கு வருதலை நீக்கார் ஆசிரியர்.. |
எ-டு : புலியும், வில்லும் கெண்டையும் நாட்டினான் எனவும் யானையும் குதிரையும் தேரும் எறிந்தான் எனவும் இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி எனவும் வரும். உருவெனப் பொதுப்படக் கூறினாராயினும் ஏற்புழிக்கோடல் என்பதனான் இரண்டாவதும் ஏழாவதுமே தொகுமெனக் கொள்க. |