இடையியல்299

செவ்வெண்ணின்கண்   உருபுதொக்குவருதல்   "பிறிதுபிறி   தேற்றலும்
உருபுதொக வருதலும்"  (வேற்-மய-21)   என்பதனாற்  பெறப்பட்டமையின்
"குன்றி  கோபம்  கொடிவிடு  பவளம்"  என்றாற் போல்வனவற்றை ஈண்டு
உதாரணமாகக் காட்டுதல் பொருந்தாதென்க.
 

பிறஎண்ணின்கண் உருபு தொகுதல் வரையப்படும் என்பது அறிவித்தற்கு
இதனை வேற்றுமையியல்களுட்   கூறாது   ஈண்டுக்   கூறினார்   இடைச்
சொல்லாதல் ஒற்றுமையான் என அறிக.
 

சூ. 293 :

உம்உந் தாகும் இடனுமா ருண்டே
(44)
 

க-து:

உம் ஈறுதிரிந்து நிற்கும் இடனுமுண்டு என்கின்றது.
 

உரை:வினைச்சொல்லிறுதியாய்  நிற்கும்   உம்மீறு உந்து என வடிவு
திரிந்து நிற்கும் இடனும்  உண்டு.   உம்மை   எதிர்மறை-ஆரும்   ஏயும்
அசைநிலை.
 

எ-டு : "நீர்க்கோழி கூப்பெயர்க் குந்து"--"நாரரி நறவின்  நாண்  மகிழ்
தூக்குந்து"-எனவரும்.
 

இவ்வும்மை   வினைசெயல்மருங்கின்.   காலமொடு   வரும்   இடைச்
சொல்லாகும்.     'இடனுமாருண்டே'     என்றதனான்       திரியுமிடம்
சிறுபான்மையாதல் புலப்படும். 'இவ்உம்மை செய்யும் என்னும் வாய்பாட்டுப்
பெயரெச்சத்தினது என்பது ஏற்புழிக் கோடலான் உணரப்படும்.
 

பொருள்   வேறுபடாமல்    வடிவுமட்டும்    வேறுபடுதலின் "தம்மீறு
திரிதலும்"   என்னும்   விதிபற்றி   இடையியலுள்  இதனை   வைத்தார்.
எண்வகைப்   பொருட்குறிப்பு   ஏற்றுவரும் உம்மை  இடைச்சொல் வேறு;
வினைசெயன்மருங்கிற்  காலமொடு   வரும்   இவ்உம்மை   இடைச்சொல்
வேறென அறிக.
 

சூ. 294 :

வினையொடு நிலையினும் எண்ணுநிலை திரியா

நினையல் வேண்டும் அவற்றவற் றியல்பே  

(45)
 

க-து:

எண்ணிடைச்சொற்கள் வினையொடும் வருமென்கின்றது.
 

உரை:எண்ணிடைச்     சொற்கள்     பெயரொடு   வருதலேயன்றி
வினைச்சொல்லொடு     கூடி      நிற்பினும்      எண்ணுதலாகிய   தம்
இலக்கணத்திற்றிரியா,  ஆண்டு   அவ்வவற்றின்  இயல்பினை  ஆராய்ந்து
கொள்ளுதல் வேண்டும்.