300இடையியல்

"நினையல் வேண்டும்" என்றதனான்  ஏகார இடைச்சொல் வினையொடு
வருதல்   அரிது   என்பதும்,   ஏனையவும்     தெரிநிலை   வினையுள்
பெயரெச்சத்தினொடும்     முற்றினொடும்  நில்லா   என்பதும்    குறிப்பு
வினையுள் முற்றொடு மட்டுமே வருமென்பதும். பெயரொடு வந்து  தொகை
பெறுவன வினையொடுவரின் தொகை பெறா என்பதும்  பிறவும் சான்றோர்
வழக்கு நோக்கிக் கொள்க.
 

எ-டு: உண்டும்    தின்றும்      பாடியும்    மகிழ்ந்தான் - எனவும்
உண்ணவெனத் தின்னவெனப் பாடவென வந்தான் எனவும் வளிநடந் தன்ன
வாச்செலல் இவுளியொடு கொடிநுடங்கு மிசைய   தேரின   ரெனாஅக்கடல்
கண்டன்ன ஒண்படைத் தானையொடு   மலைமாறு   மலைக்கும் களிற்றின
ரெனாஅ ......... வியத்தலோ    இலமே (புறம். 197)   எனவும்   நாணாமை
நாடாமை   நாரின்மை   யாதொன்றும்   பேணாமை   பேதை   தொழில்
(குறள் - 833) எனவும் வரும்.
 

சூ. 295 :

என்றும் எனவும் ஒடுவுந் தோன்றி

ஒன்றுவழி உடைய எண்ணினுட் பிரிந்தே

(46)
 

க-து:

இடையிட்டு  வந்து  ஒன்றி  நிற்கும்   எண்ணிடைச்  சொற்கள்
இவை என்கின்றது.
 

உரை:என்று-என-ஒடு   என்னும்   இவ்   எண்ணிடைச்   சொற்கள்
ஒரோவோர் சொல்லின்கண் தோன்றி நின்று  பிரிந்து  பிற சொற்களொடும்
பொருந்தி வரும் நெறியினை உடையவாம்.
 

எ-டு : "இயற்சொல்   திரிசொல்     திசைச்சொல்   வடசொல்லென்று
அனைத்தே    செய்யுளீட்டச்   சொல்லே" (எச் - 1)   எனவும்   "யாகா,
பிறபிறக்கு அரோபோ மாதென வரூஉம்   ஆயேழ்   சொல்லும்" (இடை -
31) எனவும் பொருள்கருவி காலம் வினையிடனொ   டைந்தும்   இருள்தீர
எண்ணிச் செயல் (குறள் - 675) எனவும் வரும்.
 

ஒடு என்பதோ   ரெண்ணிடைச்சொல்   உண்டு   என்பது   ஆசிரியர்
உடம்பொடு புணர்த்துக் கூறலாற் கொள்க.
 

சூ. 296 :

அவ்வச் சொல்லிற் கவையவை பொருளென

மெய்பெறக் கிளந்த இயல வாயினும்

வினையொடும் பெயரொடும் நினையத் தோன்றித்

திரிந்து வேறுபடினும் தெரிந்தனர் கொளலே

(47)