உரியியல்305

வரலாற்று  முறைமையான்  பொருட்காரண  முடையனவேயாகும்,  இதனை
ஆசிரியர்   'மொழிப்பொருட்  காரணம்  விழிப்பத்   தோன்றா' (உரி- 96)
எனக்   கூறுமாற்றான்    உணரலாம்.    வெளிப்படையாகத்    தோன்றா
என்றதனான்  ஆழ்ந்து  நோக்கின்   தோன்றும்     என்பது   ஆசிரியர்
கருத்தாதலையும் அறியலாம்.
 

அடிச்சொற்களாக   நிற்கும்   புள்ளியீற்றுச்    சொற்கள்   ஏற்புடைய
பிற   எழுத்துக்களொடு   கூடி   நிரம்பி   நிற்பனவாயினும்   அங்ஙனம்
கூட்டப்பெற்ற   எழுத்துக்களைப்     பிரித்து     அவற்றை   முதனிலை
இறுதிநிலைகளாக   வைத்துப்   புணர்த்தல்    உரிச்   சொற்களின்மாட்டு
மரபாகாது. இதனை ஆசிரியர் "எழுத்துப்    பிரிந்திசைத்தல்   இவணியல்
பின்றே"  (உரி-97)   எனக்   கூறுமாற்றான்   அறியலாம் .  உரிச்சொற்கு
இங்ஙனம் இலக்கணம் கூறியவதனான்   பெயர்ச்சொல்  வினைச்சொற்களை
ஏற்றபெற்றி   பிரித்துக்காணலாம்     என்பது    'சொல்வரைந்    தறியப்
பிரித்தனர்   காட்டல்'     (எச்ச-67)   "இருதிணை   மருங்கின்   ஐம்பா
லறிய  ஈற்றினின்    றிசைக்கும்   பதினோ   ரெழுத்தும்"  என்றவற்றான்
உணரலாம்.   அவற்றைப்    பிரித்துணரலாம்   என்றதன்றி  நிலைமொழி
வருமொழியாக வைத்துப் புணர்ச்சி விதி   நோக்குதல்   கூடாது.  இதனை
'அன்னைவை யெல்லாம் மருவின் பாத்திய புணரியல் நிலையிடை  உணரத்
தோன்றா' (எழுத்-482) என்பதனான் அறியலாம்.
 

ஆசிரியர் இவ்வியலுள்  உரிச்சொற்களின்  ஒருசார் பொதுவிலக்கணமும்
ஒருசொல்  பலபொருட்கும்  பலசொல்  ஒரு  பொருட்கும்  உரிமையாய்த்,
தனித்தும், பெயர் வினைகட்கு அடையாயும் வருவன  பற்றிய இலக்கணமும்
உணர்த்துவார். சிறுபான்மை ஒவ்வோரெழுத்து  வேறுபாட்டினான்  பொருள்
வேறுபட்டுவரும்   உரிச்சொற்களுள்    சிலவற்றையும்,    வழக்குப்பயிற்சி
குறைவான   சில    முதனிலை   உரிச்சொற்களையும்   தெளிவு   கருதி,
எடுத்துக்காட்டாக உடன் கூறுகின்றார்.
 

உரிச்சொற்களின்மாட்டு அமைந்து நிற்கும் மேற்கூறிய இலக்கணங்களைப்
பின்வரும் எடுத்துக்காட்டு விளக்கங்கள் புலப்படுத்தும்.
 

எ-டு : ஆ என்னும்   ஓரெழுத்துச்   சொல், குறிப்படியாகத் தோன்றிப்
பெற்றத்தை உணர்த்திப் பொருட் பெயராய் நின்றது. அதுவே மெய் தடுமாறி
முதனிலையாக(ஆகு)   ஏவலாயும்   -  தல்  என்னும்  இறுதியொடு  கூடி
வினைப்பெயராயும்   இன்    -  ஆன்     என்னும்    காலஇடைநிலை,
இறுதிநிலைகளொடு கூடி ஆயினான்