306உரியியல்

என வினைச்சொல்லாயும்,    ஆ ! இனி   என்   செய்யும்,  என இரங்கற்
குறிப்புணர்த்தி இடைச் சொல்லாயும் நின்றது.
 

'கா'   என்னும்   ஓரெழுத்து   உயிரீற்றுச்   சொல்,   குறிப்படியாகத்
தோன்றிச்,   சோலையையும்,   காவுதடியையும்    உணர்த்திப்   பொருட்
பெயராயும், உகர இறுதியொடு கூடியும்  கூடாதும்   ஏவல்   வினையாயும்,
த்தல்    என்பதனொடுகூடி      தொழில்     பெயராயும்,   த்   ஆன்
என்பவற்றொடுகூடிக் காத்தான் என வினைச் சொல்லாயும் நின்றது.
 

'மா' என்னும்  ஓரெழுத்து   உயிரீற்றுச்சொல்   பண்படியாகத் தோன்றி
மாமரத்தையும்,     குதிரையையும்,       பெருமையையும்,   நிறத்தையும்;
இசையடியாகத்  தோன்றி  விலங்கையும்,  வண்டினையும்;   குறிப்படியாகத்
தோன்றித்  திருமகளையும்    உணர்த்திப்    பொருட்பெயராய்   நின்றது.
உப்பின்று   புற்கை    உண்கமா   என   இடைச்சொல்லாயும்   நின்றது.
இதனடியாக வினைச்சொல் தோன்றுமேற் கண்டுகொள்க.
 

'ஆர்'   என்னும்   புள்ளியீற்றுச்   சொல்   குறிப்படியாகத்  தோன்றி
ஆத்திமரத்தையும்,         கொன்றையையும்,        வண்டிச்சக்கரத்தின்
உறுப்பினையும்,  அம்  என்னும்  இறுதியொடு   கூடிச்  சாந்தமரத்தையும்
உணர்த்திப்   பொருட்   பெயராய்   நின்றது.   தல்    என்பது   சேரத்
தொழிற் பெயராயும்,  க   என்பது   சேர   வியங்கோள்   வினையாயும்;
'ந்த்   ஆன்'   என்னும்   இடைநிலை  இறுதி நிலைகளொடு சேர வினை
முற்றாயும் நின்றது.
 

இஃது   பண்படியாகத்     தோன்றுங்கால்     ஆர்வம்,   ஆர்வலர்
என்பவற்றிற்கு முதனிலையாயும் ஆராய்வு என்னுமிடத்துப் பெயரடையாயும்,
இசையடியாகத் தோன்றுங்கால்  ஆர்த்தான்,  ஆரித்தான்   என்பவற்றிற்கு
முதனிலையாயும்  ஆரவாரம்  என்னுமிடத்துப்  பெயரடையாயும்  நின்றது.
இதுவே நெறிப்பட வாராமல் அல் என்பதனொடு கூடி 'ஆரல்' என நின்று
கார்த்திகை மீனைக் குறித்துப் பெயராயும், சேந்தனார், 'செல்லுமார் முதலே'
என இடைச்சொல்லாயும் நின்றது.
 

'வள்'   என்னும்    நெறிப்படவாராக்   குறைச்சொல்,  குறிப்படியாகத்
தோன்றிப் பொருட்குறை எழுத்துக்  கூட்ட,  வளி-வளம்,  வளார், வள்ளம்,
வள்ளி, வள்ளை, வளவன் என்னும் பெயர்ச் சொற்களின்  அடிநிலையாயும்,
வளை,   வளைவு,  வளைதல், வளர், வளர்க,  வளர்ந்தான்,   வளர்த்தான்
என்னும் வினைச் சொற்களின்  அடிநிலையாயும்,  வள்வார்  முரசு   எனப்
பெயரடை