யாயும், வள்வள் எனக் குரைத்தது என்புழிக் குறிப்பிடைச் சொல்லாயும் வட்டு, வட்டம், என்பவற்றிற்கு மூலமாயும் நின்றது. |
உரு (உர் + உ = உரு) என்னும் நிறையுரிச்சொல் குறிப்படியாகத் தோன்றிப் பெயராயும், உருபு, உருவம் என்பவற்றிற்கு முதனிலையாயும், உருத்தான், உருத்து என்னும் வினைகட்கு முதனிலையாயும், உருகெழு கடவுள் எனப் பெயரடையாயும், உருவம் எனப் பெயர் முதலாயும் நின்றது. |
'சால்' என்னும் சொல் குறிப்படியாகத் தோன்றிப் (மிடா) பொருட் பெயராயும்; சால்பு, சான்றோன், சான்று எனப் பெயர்க்கு முதனிலையாயும்; சாலும், சான்றான், என வினைக்கு முதனிலையாயும், சாலச்சிறந்தான் என வினையடையாயும் நின்றது. |
'பரவ்'-'பழிச்' என்பவை உகரம் பெற்று நிரம்பிப், பரவு, பழிச்சு, என ஏவலாயும், பரவல், பழிச்சல் எனத் தொழிற் பெயராயும் பரவினான், பழிச்சினான் என வினைக்குமுதல் நிலையாயும் நின்றன. பரவு என்பது பராவு எனத் திரிந்தும் வரும். பரவு, பழிச்சு என்புழி இறுதிநிலை உகர எழுத்துப் பிரிந்திசையாமையும் கண்டு கொள்க. பரவை (கடல்) என்பதற்கும் பரப்பு (நிலம்) என்பதற்கும் முதனிலை 'பர' என்பதாகும். பரப்பினான் என்னும் வினைக்கும் பர என்பதே முதனிலையாம். இவ்வாறே ஏனையவற்றையும் "வழிநனி கடைப்பிடித்துப் பாங்குற உணர்ந்து" கொள்க. |
சூ. 298 : | உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை |
| இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றிப் |
| பெயரினும் வினையினும் மெய்தடு மாறி |
| ஒருசொல் பலபொருட்கு உரிமை தோன்றினும் |
| பலசொல் ஒருபொருட்கு உரிமை தோன்றினும் |
| பயிலாத வற்றைப் பயின்றவை சார்த்தித் |
| தத்தம் மரபின் சென்றுநிலை மருங்கின் |
| எச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல் |
(1) |
க - து: | "பொருட்குறை கூட்ட இயன்ற மருங்கின் - பன்முறை யானும் பரந்து பட்டு வரும் உரிச்சொல்லெல்லாம் இனைத்தென அறியும் வரம்பு தமக்கின்மையின் ஓம்படை யாணையிற் கிளந்தவற் றியலான் பாங்குற உணர்ந்து." அவற்றின் பொருளுணர்த்துமாறு கூறுமுகத்தான் உரிச் சொற்களுக்காவதொரு பொதுவிலக்கணம் உணர்த்துகின்றது. |