என்னும் நால்வகைச் சொற்கும் பொதுவாகும். திரிசொற்கள் வேறுபடுவினையானும் இனத்தானும் சார்பானும் தம்பொருளை வரையறுத்துணர்த்தும் ஆதலின் அது தொடர் மொழிக்கண் எய்தும் இலக்கணமாகும். அதனான் பலபொருளொரு சொல்லாகிய அவற்றைப்பற்றிக் கிளவியாக்கத்துட் கூறினார். ஈண்டுக் கூறும் "ஒருசொல் பல பொருட்குரிமை தோன்றினும், பலசொல் ஒரு பொருட்குரிமை தோன்றினும்" என்பது உயிரும் புள்ளியும் இறுதியாகிப் பொருட்குறை கூட்டநிரம்பிப் பெயரினும் வினையினும் மெய்தடுமாறி வரும் நிலைமைக்கண் அம்முதனிலைத் தனிச் சொற்கள் எய்தும் இலக்கணமாம் என்க. | அஃதாவது குறைச்சொல்லாகத் தோன்றிய ஓர் உரியடிச் சொல், பெயராகவும், வினையாகவும், தனித்தும், பெயர் வினைகட்கு அடையாகவும் உருப்பெற்று நிரம்பிப், பொருட்குரிமையாகும் சொல் நிலைமையாம். அதனான் பொருள்குறித்து வருதல் வேறு பொருட்குரிமையாதல் வேறு ஆதலின் பொருட்குரிமையாதலையே உரிச்சொற்குரிய இலக்கணமாக ஓதினார் ஆசிரியர் என்க. | வரலாறு: உறு என்னும் இவ் உரிச்சொல் குறிப்பு அடிப்படையாக முகிழ்த்த 'உற்' என்னும் குறைச்சொல் உகர எழுத்துப் பெற்று நிரம்பி, மிகுதி என்னும் பொருள் பட நிற்கும். அஃது உறுபுனல் - உறுவளி, எனப் பெயரடையாய் வரும். | இனி, இவ் 'உற்' என்பது உறுதுணை - உறுவ - உறுதி - உறுகண் - உறுப்பு - உறவு - உறுதல், உறீ, உறீஇ - உறை என வேறுவேறு எழுத்துப் பெற்றும், உற்று-உற்றார், உற்ற என இரட்டித்தும், உறற்க எனப் பிறிதேற்றும் வருங்கால் பெயர்க்கும் வினைக்கும் முதனிலையாய் நின்று பல்வேறு பொருட்கு உரிமை பூண்டு நிற்கும். இங்ஙனம் உறு என்பது, பெயர் - வினைகட்கு முதனிலையாய் நிற்குங்கால் பொருந்துதல் - அடைதல், செல்லுதல், சேர்தல், மோதுதல், வருந்துதல் முதலாய பொருள்களையும் - உரிச்சொல்லாகிப் பெயரடையாக நிற்குங்கால் 'மிகுதி' என்னும் ஒரே பொருளையும் தந்து நிற்றல் காண்க. மற்றும் உரிச்சொல்லாக நிற்குங்கால் முதனிலையின் பொருள் வேறுபட்டு நிற்றலையும் காண்க. | 'தட' என்னும் உரிச்சொல், 'தட்' என்னும் குறைச்சொல்லடியாகப் பிறந்ததாகும். இது தடந்தோள், தடமருப்பெருமை என உரிச்சொல்லாய் நிற்குங்கால் பெருமை-வளைவு என்னும் பொருள்களை உணர்த்தி அடையாக நிற்கும். இது தடம், தடா, |
|
|