332உரியியல்

சூ. 385 :

ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே
(88)
 

உரை:மேற்கூறிய  கடி   என்னும் சொல் ஐயமும்   கரிப்பும்  ஆகிய
பொருள்கட்காகி  வருதலும்   உரித்தாகும்.   ஐயம்   குறிப்புரிச்   சொல்.
கரிப்பு - பண்புரிச்சொல். எ-டு : 'கடுத்தனள் அல்லளோ அன்னை' எனவும்
"கடிமிளகு   தின்ற   கல்லா   மந்தி"  எனவும்  வரும். "கடா"  என்பது
இதனடியாகப் பிறந்த பெயராகும் (கடா-ஐயவினா).
 

சூ. 386 :

ஐ வியப்பாகும்
(89)
 

உரை:ஐ என்னும் குறிப்புரிச்சொல்   வியப்பென்னும்   பொருட்காகி
வரும்.   எ-டு : ஐதே   காமம்  யானே...(நற்-143)     எனவரும்.    இது
பெயர்ப்போலியாக வரும்
 

சூ. 387 :

முனைவு முனிவாகும்
(90)
 

உரை:முனைவு   என்னும்   குறிப்புரிச்   சொல்   முனிதலென்னும்
பொருட்காகி வரும். எ-டு : சேற்றுநிலை  முனைஇய   செங்கட்   காரான்
(அகம்-46)   எனவரும்.   முனை - முன்னர்  - முனைந்தான்-முற்பட்டான்
எனவரும் பெயர்-வினைகள் வேறு. இது வேறு.
 

சூ. 388 :

வையே கூர்மை
(91)
 

உரை:வை என்னும் குறிப்புரிச்சொல் கூர்மை என்னும்  பொருள்பற்றி
வரும்.   எ-டு : வைந்நுனைப்பகழி    (முல்லை-73)    எனவரும்.   இது
பெயர்ப்போலியாக வரும்.
  

சூ. 389 :

எறுழ் வலியாகும்
(92)
 

உரை:எறுழ்   என்னும்   குறிப்புரிச்   சொல்   வலிமை   என்னும்
பொருட்காகிவரும்.   எ-டு : போரெறுழ்    திணிதோள் (பெரும்பாண்-63)
எனவரும். இது பெயர்ப்போலியாக வரும்.
 

சூ. 390 :

மெய்பெறக் கிளந்த உரிச்சொல் லெல்லாம்

முன்னும் பின்னும் வருபவை நாடி

ஒத்த மொழியாற் புணர்த்தனர் உணர்த்தல்

தத்தம் மரபிற் றோன்றுமன் பொருளே

(93)
 

க-து:

பயிலாதவற்றைப்   பயின்றவை     சார்த்தி.....எச்சொல்லாயினும்
பொருள் வேறு   கிளத்தல்   (உரி-1)   என்னும்  நூற்பா உரிச்
சொற்குப்  பொருளுணர்த்துமாறு   கூறிற்று.   இச்சூத்திரம்  ஓர்
உரிச்சொல்  பல   பொருட்கும்   பல     உரிச்சொற்கள்  ஒரு
பொருட்கும்   உரிமைபெற்று   வருங்கால் அவ்உரிச்சொற்களை
இருவகை வழக்கினும் ஒருவன் வழங்குமாறு கூறுகின்றது.