சில எடுத்துக் காட்டுக்கள் : உறு என்னும் உரிச்சொல் உற் என்னும் குறைச்சொல் உகரம் பெற்று நிரம்பியதாயினும் அது புணரியல்விதிப்படி உற்று என ஆகாமையுணர்க. உரு நளி முதலியனவும் அன்ன. (எறு + ஊழ்) எறுழ் என்றாற் போல்வன மருவி நின்றனவாம். இங்ஙனம் பெயர்களுள்ளும் நிலம் (நில் + அம்) கனி (கன் + இ) மரம் (மரு + அம்) கொடி (கொடு + இ) மங்கலம் (மண் + கலம்) எனப் புணரியல் விதிகட்கு மாறாயும் மரூஉவாயும் அமைந்தன. வினைகளுள்ளும் செய (செய்+அ) உள (உள்+அ) கண்டு (காண்+து) கொணா (கொண்டு+வா) என வந்தனவும் அன்ன. |
இனிப் பிரிந்திசைப்பன வருமாறு : நாடன் (நாடு + அன்) ஊரன் (ஊர் + அன்) மலையன் (மலை + அன்) கொள்பவன் (கொள் + ப் + அன்) காண்பான் (காண் + ப் + ஆன்) அரசன் (அரச + அன்) ஆயன் (ஆ + அன்) எனவரும். (யகரம் உடம்படுமெய்) |
சூ. 397 : | அன்ன பிறவும் கிளந்தன அல்ல |
| பன்முறை யானும் பரந்தன வரூஉம் |
| உரிச்சொல் எல்லாம் பொருட்குறை கூட்ட |
| இயன்ற மருங்கின் இனைத்தென அறியும் |
| வரம்புதமக் கின்மையின் வழிநனி கடைப்பிடித்து |
| ஓம்படை ஆணையிற் கிளந்தவற் றியலான் |
| பாங்குற உணர்தல் என்மனார் புலவர் |
[100] |
இதனைப், பொருட்குறை கூட்டஇயன்ற மருங்கின், கிளந்தன அல்ல அன்னபிறவும் பன்முறையானும் பரந்தன வரூஉம் உரிச்சொல்லெல்லாம், இனைத்தென அறியும் வரம்பு தமக்கின்மையின், ஓம்படை ஆணையிற் கிளந்தவற்றியலான் வழிநனி கடைப்பிடித்துப் பாங்குற உணர்தல் என்மனார் புலவர் எனக் கூட்டிப் பொருள் கொள்க. |
க-து: | உரிச் சொற்களுக்கெல்லாம் ஆவதொரு புறனடை கூறுகின்றது. |
|
உரை:நெறிப்படவாராக் குறைச் சொற்கள் பொருள் நிரம்புதற்கேற்பப் பிறஎழுத்துக்களைக் கூட்டலான், அச்சொற்களின் வடிவமும் பொருளும்நிரம்பி உரிச்சொல்லாக இயலுமிடத்து, மேற்கிளந்து கூறிய சொற்கள் அல்லாத பிறவுமாய்ப் பல்வேறு நிலையிற் பரந்துபட்டு வரும், அவ் உரிச்சொற்களெல்லாம் ஒவ்வொன்றும் இத்தன்மைத்து என அறிந்து கொள்ளும் எல்லை அவைதமக்கின்மையான், தொன்னூலார் ஓம்படையாணையாற் |