உரியியல்339

கிளந்து   கூறிய,   இசையினும்   குறிப்பினும்   பண்பினும் தோன்றுதலும்
பெயரினும் வினையினும் மெய்தடுமாறுதலும்   ஆகிய   நெறியினை நன்கு
கடைப்பிடித்து அவ்இலக்கணத்தான்  அவற்றின்   பாங்கினைப்  பொருந்த
உணர்ந்து கொள்க எனக் கூறுவர் புலவர்.
 

கிளந்தன அல்ல  அன்னபிறவுமாய்   வருவனவற்றுட்   சிலவருமாறு :
'இரும்'  (இருமை)   என்பது   கருமையும், பெருமையுமாகிய பண்புணர்த்தி
வருதலும்,   'சேண்'   என்பது   சேய்மையாகிய குறிப்புணர்த்தி வருதலும்
'நொறில்'   என்பது   நுடக்கமாகிய   குறிப்பும்,   'தெவிட்டல்'   என்பது
அடைதலாகிய  குறிப்பும்   'மலிதல்'   என்பது நெருங்குதலாகிய குறிப்பும்
உணர்த்தி வருதலும் பிறவுமாம்.
 

பொருட்குறை   கூட்ட    நிரம்புதலாவது :- உற்-உர்-குர்    முதலாய
புள்ளியீற்றுக் குறைச்  சொற்கள்   உகர   எழுத்தைக்   கூட்டலான் உறு,
உரு,  குரு  எனவும், பய், பச் என்பவைகளை ஓர் அகரத்தைக் கூட்டலான்
பய-பச (பயப்பு-பசப்பு) எனவும் உச், வய் முதலியவை  ஓர்  ஆகாரத்தைக்
கூட்டலான் உசா, வயா, எனவும் பிண்-பண் என்பவை   ஓர்  ஐகாரத்தைக்
கூட்டலான் பிணை, பணை எனவும்  புலம்,   நம்   என்பவை  ஓர் உயிர்
மெய்யைக்  கூட்டலான்  புலம்பு-நம்பு  எனவும்  'சீர்'  என்பது 'த்தி' என
இரண்டெழுத்தைக் கூட்டலான்  சீர்த்தி  எனவும்  சொல்வடிவும், பொருள்
நிலையும் நிரம்பி நிற்றலாம். செல்,  இன்,  சாய்,  மல்,   முதலியவை அல்
என்னும் ஈரெழுத்தாலாகிய ஓர்  அசையினைக்  கூட்ட, செல்லல், இன்னல்,
சாயல், மல்லல் எனவும்  'பட்'  என்பது அர் என்னும் அசையைக் கூட்ட,
படர் எனவும் இலம்  என்பது பாடு என்னும் அசையைக் கூட்ட இலம்பாடு
எனவும் பொருள் நிறைந்து நின்றமை காண்க.
 

இனிக்  கூர்,   வார்,  வாள், தெவ்,  முதலியவை பிற எழுத்துக் கூட்ட
வேண்டாது நின்றாங்குநின்று வடிவும்  பொருளும்நிரம்பி  அமைந்தனவாம்.
ஏ, வை, ஐ, குழ, மழ எனவரும் உயிரீற்றுச்  சொற்களும்   அவ்வாறே பிற
எழுத்து வேண்டாது நிரம்பி நின்றனவாம்.  பையுள்  (பை+உள்)  அலமரல்
(அலம்+அர்+அல்) தெருமரல் (தெரும்+அர்+அல்) கம்பலை (கம்+ப்+அல்+ஐ)
கெடவரல்  (கெட+வர்+அல்)  என்பவை,   ஒன்றும்  பலவுமாகிய எழுத்தும்
அசையும்   கூடி    நிரம்பிநின்றனவாம்.    உரிச்சொற்கள்     இங்ஙனம்
ஓரெழுத்துமொழி  வடிவாகவும்,  பெயர்   வடிவாகவும், தொழில்முதனிலை
வடிவாகவும், தொழிற்பெயர் வடிவாகவும் எச்சவினை வடிவாகவும் பல்வேறு
நிலையில் நிரம்பி வருதலின்