உரியனவாகும். அவை விரவுப் பெயராக வரா, அன், ஆன், அள், ஆள் என்னும் ஆண்மை பெண்மை உணர்த்தும் இறுதி இடைச் சொல்லொடும் பெண்பால் உணர்த்தும் இகர இறுதியொடும் கூடிவரும் பெயர்ச் சொற்களும் கள் விகுதி பெறாமல் வரும் அஃறிணை இயற்பெயர்ச் சொற்களும் முன்னிலைப் பெயர்களும் உறவு முறைப் பெயர்களுமே விரவுப்பெயராக வரும். ஆதலின், ஆண்மை பெண்மை உணர நிற்கும் இறுதி இடைச்சொல்லொடு கூடிய பெயர்களும் முறைப்பெயர்களும் இருதிணையுள்ளும் அவ்வப்பால்களுக்கு உரியவாய் விரவும். ஆண்மை பெண்மை உணர நில்லாத இயற்பெயர்கள் உயர்திணையுள் ஆண்மைப் பொருள் பெண்மைப் பொருள் அஃறிணையுள் ஒருமைப் பொருள் பன்மைப் பொருள் என்னும் நான்கனோடும் விரவும். இவற்றை ஆண்மைப் பொதுப்பெயர், பெண்மைப் பொதுப்பெயர் ஒருமைப் பொதுப்பெயர், பன்மைப் பொதுப்பெயர் எனக் குறியீடு செய்துணர்த்துகின்றார் ஆசிரியர். |