சொற்கள் அவாய்நிலைபட எச்சப்பட்டு நின்றும், முடிந்தும் பொருள் உணர்த்துமாறும் நால்வகைச் சொற்களும் பல்வேறு குறிப்புக்களான் பொருள்தருமாறும் பற்றிய இலக்கணங்களும் இவ்வதிகாரத்திற்குரிய புறனடையுமாம். |
சூ. 398 : | இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொலென்று |
| அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே |
(1) |
க-து: | நால்வகைச் சொற்களும் கருவியாகப் "பாட்டுரைநூல் [செய்யு-75] முதலாய எழுவகைச் செய்யுட்களைப் புனைந்து கூறுங்கால் ஆண்டு மாத்திரை முதலாய உறுப்புக்களமையச் சொற்கள் ஈட்டப்படுதலின் அச்சொற்கள் பொருள் விளக்கும் முறைமையானும் இனக்கூறுபாட்டானும் அவை வேறு குறியீடுகளைப் பெறுமாறும் அவற்றின் இலக்கணமும் கூறத் தொடங்கி, இச் சூத்திரத்தான் செய்யுட் குறியீடாக வரும் சொற்களின் பெயரும், முறையும், தொகையும் கூறுகின்றார்.
|
|
உரை:செய்யுளீட்டத்திற்குரிய சொல் இயற்சொல் திரிசொல், திசைச் சொல், வடசொல் எனப்படும் அவ்வளவிற்றேயாம். 'சொல்' என்றது இன (சாதி) ஒருமை. அதனான் அனைத்தே என்றார். |
சூ. 399 : | அவற்றுள் |
| இயற்சொற் றாமே |
| செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் |
| தம்பொருள் வழாமை இசைக்கும் சொல்லே |
(2) |
க-து: | இயற்சொல்லின் இயல்பும் அது வழங்குமிடமும் கூறுகின்றது. |
|
பொருள் : மேற்கூறிய செய்யுட்சொல் நான்கனுள் இயற்சொல் எனப்பட்டவைதாம் செந்தமிழ் நிலத்து மக்கள் வழங்கும் வழக்கொடு பொருந்தி ஏனைய நிலத்தும் தம்பொருள் திரியாமல் உணர்த்தும் சொல்லாகும். |
பிறசொற் கொணர்ந்து பொருளுணர்த்த வேண்டாது கற்றோர்க்கும் மற்றோர்க்கும் ஒப்ப இயல்பாகப் பொருள் விளங்க நிற்றலின் "இயற்சொல்" எனப்பட்டது (நிலம் - ஆகுபெயர்) தம்பொருள் வழாமை என்றது, திரிபின்றி யாண்டும் ஒருபொருளே உணர்த்தி நிற்றலையாம். |
இனிப் பாயிரத்துள் செந்தமிழியற்கை சிவணிய நிலம் என்றது செய்யுளிலக்கியத்தையும் ஈண்டுச் செந்தமிழ் நிலம் என்றது நாட்டினையும் குறிக்குமாறென்னை எனின்? பாயிரத்துள் "செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல் கண்டு "என்புழி |