342எச்சவியல்

நிலத்தொடு   என்னும்   ஒடுச்சொல்   முந்துநூல்களைத்  தழுவிநிற்றலின்
முந்து நூலாகிய இலக்கண நூல்களொடு   ஒப்ப   எண்ணுதற்   குரியவை
செய்யுள்  இலக்கியங்களேயாம்.   நிலம்   என்பது  செய்யுளைக் குறிக்கும்
என்பதனைப்   "பாட்டுரை   நூலே   வாய்மொழி பிசியே அங்கதம் முது
சொலொடு   அவ்வேழ்   நிலத்தும்   (செய்யு-75)   என்பதனான்  அறிக.
ஈண்டுநாட்டினைக்   குறித்து   நிற்றலைப்   பின்னர்த்   திசைச்சொல்லை
விளக்குமிடத்துச் செந்தமிழ் சேர்ந்த பன்னிரு  நிலத்தும்,  தங்குறிப்பினவே
திசைச்சொற்கிளவி என மட்பரப்பாகிய நிலத்தொடு சேர்த்துக் கூறிதலானறிக.
 

நிலந்தருதிருவிற்  பாண்டியன் புரப்ப நூலோர் அவை அமைந்துள்ளதும்
தொல்காப்பியம் அரங்கேறியதும், நல்லிசைப் புலவோர்   கூடிச்  செந்தமிழ்
ஆய்வதும் ஆக்குவதும் நிகழும் நாடாதலின்  பாண்டிநாடு   செந்தமிழ்நாடு
எனப்பட்டது.   "வட வேங்கடம்   தென்குமரி   ஆயிடைத்   தமிழ்கூறும்
நல்லுலகம்", 'தண்பொழில் வரைப்பின்   வண்புகழ்  மூவர்க்கும்' (செய்-75)
உரியதாய் முல்லை முதலாக  ஐவகை   நிலக்கூறுகளும்  அமைந்ததாகலின்
அவ்வந்நிலத்துக்    கருப்பொருள்களும்     இயற்கையமைப்பும்   மக்கள்
ஒழுகலாறும் ஆட்சி உரிமையும் பற்றித்  தமிழகம் பதின்மூன்று பகுதிகளாக
வழங்கப் பெற்றுள்ளது. அவற்றுள் நல்லிசைப் புலவோர் கூடித் தமிழாராயும்
அவையாம் (கூடல்-சங்கம்)  அமைந்திருந்த   சிறப்பான்   பாண்டி   நாடு
செந்தமிழ் நிலம் எனப்பட்டது என்க.
 

ஏனைய   நிலங்களாவன:   (1) தென்பாண்டி   நாடு (2) குட்ட நாடு
(3) குடநாடு     (4) கற்காநாடு   (5) வேணாடு (6) பூழிநாடு (7) பன்றிநாடு
(8) அருவாநாடு   (9) அருவாவடதலை நாடு   (10) சீதநாடு (11) மலைநாடு
(12) புனல்நாடு என்பனவாம்.
 

தொல்காப்பியம்     அரங்கேறிய      நிலந்தருதிருவிற்   பாண்டியன்
காலத்து அமைந்திருந்த செந்தமிழ் நிலஞ் சேர்ந்த   பன்னிரு  நிலங்களை
வரைந்தறிதற்கு முழுமையான சான்றுகள் இற்றைக்குக் கிட்டாமையான் மேற்
கூறிய   விளக்கம்   சங்க   இலக்கியங்களொடு  ஒருவாறு  ஒப்பநோக்கிக்
கூறப்பட்டது.
 

இயற்சொல்லுக்கு     எடுத்துக்காட்டுக்கள்    வருமாறு:- நம்பி-நங்கை,
புலவர், மக்கள், அன்னை, மகன், வடுகன், நாகன், கண்ணன், - நிலம், நீர்,
மலை, மா, மரம், பறவை, மீன், நாடு, நகர், நாள், காலை, மாலை, வேனில்,
கண், கால், வாய். கருமை, செம்மை, வட்டம், கோணம், இருத்தல், கிடத்தல்
எனவரும் பெயர்ச் சொற்களும், உண்டான், சென்றான், கரியன்,