பொன்னன், காணும், கேட்கும், வாழ்க, உண்டு, இல்லை எனவரும் வினைச் சொற்களும் அவை போல்வன பிறவுமாம். இடையும் உரியும் பெயர் வினைகளுள் அடங்கும் என மேற்கூறிய விளக்கத்தைக் கடைப்பிடிக்க : |
இவற்றுள் மாலை என்பது பொழுதையும் அலங்கலையும் குறிக்குங்கால் இயற்சொல்லாம், மயக்கம், இயல்பு முதலிய பொருள் குறித்து வருங்கால் திரிசொல்லாம். இங்ஙனம் சொல்லின் பொருள் வரவிற்கேற்ப இயற்சொல் திரிசொல் என்பவை தம்முள் மயங்குமென அறிக. |
சூ. 400 : | ஒருபொருள் குறித்த வேறுசொல் லாகியும் |
| வேறுபொருள் குறித்த ஒருசொல் லாகியும் |
| இருபாற் றென்ப திரிசொற் கிளவி |
(3) |
க-து: | திரிசொல்லின் இயல்பும் வகையும் கூறுகின்றது. |
|
உரை:அந்நான்கனுள் திரிசொல் எனப்படும் செய்யுட்சொல் ஒரு பொருளைக் குறித்த வேறு வேறு சொல்லாகியும், வேறு வேறு பொருளைக் குறித்த ஒரு சொல்லாகியும் வருதலாகிய இரண்டு பாகுபாட்டினது என்று கூறுவர் ஆசிரியர். |
திரிசொல் என்பது இயற்சொல் என்பதன் மறையாகலின் இயற்சொல்லுக்கு ஓதிய இலக்கணத்தை மறுத்துக் கொள்வது இதன் இலக்கணம்என்பது அப்பெயரானே புலப்படுதலான் அதன் பாகுபாடுமட்டுமே விரித்துக் கூறப்பட்டதென்க. இஃது உய்த்துணர வைப்பென்னும் உத்தியின் பாற்படும். எனவே, இயற்சொல்போல யாண்டும் ஒருபொருளேதாராமல் ஒருகால் ஒரு பொருளையும் பிறிதொருகால் வேறு பொருளையும் இடம் நோக்கித் தந்து அரிதுணர நிற்றல் இதன் இலக்கணம் என்பது புலனாம். |
திரிதல் என்றது யாவரும் உணரப் பொருள் விளங்க நிற்கும் இயல்பினின்று வேறுபடுதலை உணர்த்தி நின்றது. இதனைப் "பொருட்குத் திரிபில்லை உணர்த்த வல்லின்" (உரி-96-) என்பதனானும் அறிக. |
ஒருசார் உரையாளர் திரிதல் என்பதற்குச் சொல் வடிவு திரிதல் எனப் பொருள் கொண்டு, உறுப்புத் திரிதலும் - முழுதும் திரிதலும் எனத்திரிபு இரு வகைப்படும் எனக்கூறுவர். அவர் மாற்று நிலைச்சொற்களை (பரியாயப் பெயர்) முழுதுந்திரிந்தன |