இயற்றப்பட்டன. அதனான் அது தெய்வமொழி, பெருமொழி எனப் போற்றப்பட்டது. |
அம்முறையான் சமற்கிருதம் என்னும் வடமொழியிற் கலந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் தமிழுக்குத் தாய உரிமையுடையவாயின. அவை சமற்கிருத மொழிக்குரிய ஓசை ஒலிகளொடு நிற்பின் தமிழ்ச்செய்யுளுக்குரிய பல ஓசையும் புணர்ச்சிவிதிகளும் இயையாவாகலின் அவற்றைத் தமிழ் இலக்கணநெறிக்கு ஏற்பத் தமிழறிஞர் செப்பஞ்செய்து கொள்வாராயினர். அவை தமிழினின்றும் சென்று மீண்டவை என்பதுவிளங்க அதனைத் தமிழின் சொல்வகையுள் ஒன்றாகக் கொண்டனர். "வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே" என்பார் தொல்காப்பியர். அங்ஙனங் கொடுத்ததைக் கொள்ளுங்கால் கொடாதன சிலவும் கொள்ள நேரும், நேரின் அவையும் அப்பெயரானே வழங்கப்பெறும் என்பது விளங்கச் "சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்" என்றார். இதுகாறுங் கூறியவற்றான் வடமொழி என்பது சமற்கிருதம் என்னும் மொழியைக் குறிக்கும் என்பதும் வடசொல் என்பது சமற்கிருதத்திற்குச் சென்று மீண்ட பழந்தமிழ்ச் சொல்லைக் குறிக்கும் என்பதும் விளங்கும். இவ்வரலாற்றுண்மையைப் பேரறிஞர் பி. டி. சீனிவாச ஐயங்கார் தனது 'பழங்கால இந்திய மக்கள் வாழ்க்கை' என்னும் நூலிற் பின்வருமாறு குறித்துள்ளமையானும் தெளியலாம். |
The Dravidian Names of things and operations connected with all these arts of Peace are Native and not foreign (i.e, borrowed from Sanskrit). The question has not yet been investigated, but on enquiry it will most probably turn out That many Sanskrit words connected with These arts were borrowed from the Dravidian. [Life in Ancient India P. T. S. lyengar] |
சூ. 402 : | வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ |
| எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே |
[5] |
க-து: | வடசொல்லாமாறு கூறுகின்றது. |
|
உரை:செய்யுட்சொல் நான்கனுள் வடசொல்லாகிவரும் சொற்களாவன சமற்கிருத மொழிக்குரிய எழுத்தொலியின் நீங்கித் தமிழெழுத்திற்குரிய ஒலியொடு புணர்ந்தமையும் சொற்களாகும். |