அவையாவன: ஒருவரோடொருவர் செப்பும் வினாவுமாக உரைநிகழ்த்துங்கால், செவ்வனிறையாகாமல் இறை பயப்பதாக வருவனவும் ஒருவரையும் ஒன்றனையும் பன்மை வாய்பாட்டான் கூறும் உயர்சொற்கிளவிகளாக வருவனவும் அல்லதில் என்னும் வாய்பாட்டாற் கூறுவனவும் பிறிதுபொருள் கூறி உணர்த்துவனவும், பொருளொடு புணராச் சுட்டுப் பொருள் உணர்த்தி வருவனவும், மற்றும் ஒருசார் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் சார்பு முதலியவற்றான் திணையும் பாலும் உணர்த்தி வருதலும், பலபொருளொரு சொற்கள் வேறுபடுவினையானும் இனத்தானும் சார்பானும் பொருள் வரைந்துணர்த்தலும், எடுத்தமொழி இனஞ்சுட்டி வருதலும் பெயரினும் தொழிலினும் தாமாகப் பிரிந்து பொருள்பயத்தலும் தடுமாறு தொழிற்பெயர்கள் ஒன்றனை வரைந்துணர்த்தலும் தத்தம் பொருள்வயின் தம்மொடு சிவணியும் ஒப்பில்வழியாற் பிறிது பொருள் சுட்டியும் வரும் பல்வேறு ஆகுபெயர்கள் பொருளுணர்த்தி வருதலும் சிறப்புப் பெயர் சிறப்புவினைகளான் அஃறிணை இயற்பெயர் பால்காட்டி நிற்றலும், செய்யும் என்னும் வாய்பாட்டு ஒருசார்வினைமுற்றுக்கள் உயர்திணை உணர்த்தி நிற்றலும் பால்காட்டி நிற்றலும் விரவுப் பெயர்கள் முன்னும் பின்னும் வரும் |