கிளவியாக்கம்31

'உயர்திணைய'  என்பது  "அதுச்சொல்  வேற்றுமை உடைமை யானும்"
(வினை-16)  என்பதனடியாகப் பிறந்த குறிப்பு  வினைமுற்று. அஃது ஆடூஉ
வறிசொல்   மகடூஉவறிசொல்   என்பவற்றிற்கும்   அம்முப்பாற்    சொல்
என்பதற்கும் உரியவினையாய்ப் பொதுப்பட நின்றது. ஏகாரம் ஈற்றசை.
   

இச்சூத்திரத்தான்     விதிக்கப்படுவது    உயர்திணைச்    சொல்லின்
பாகுபாடாதலின்   "அம்முப்    பாற்சொல்  உயர்திணை  யவ்வே" என்று
கூறியிருப்பினும் "உயர்திணைச்சொல் அம்முப்பாலாம்" என்பது  கருத்தென
அறிக.   மேல்வரும்   சிறப்புச்  சூத்திரங்களான்  உயர்திணைச்சொல்லின்
பாகுபாடு பெறப்படுமாயினும்,  மூன்றே  என்னும்  வரையறை பெறுதற்காக
இச்சூத்திரத்தாற் தொகை கூறினார் என உணர்க.
   

சூ. 3 :

ஒன்றறி சொல்லே பலவறி சொல்லென்று

ஆயிரு பாற்சொல் அஃறிணை யவ்வே
[3]
 

கருத்து :

அஃறிணைச் சொற்பாகுபாடு கூறுகின்றது.
 

உரை:  ஒன்றனை  அறிவிக்கும்   சொல்லும்  பலவற்றை  அறிவிக்கும்
சொல்லும் என அவ்விரு கூறாகிய சொற்களும் அஃறிணையவாகும்.
   

'ஒன்றறிசொல்    பலவறிசொல்    அஃறிணையவ்வே'   என்பவற்றிற்கு
மேற்கூறியாங்கு விளக்கம் கொள்க.
  

அஃறிணையுள் விலங்கு   முதலிய   ஒருசாரனவற்றிற்கு  ஆண், பெண்
வேறுபாடு   தெளிவாக    உளதெனினும்,     அவை    வினைமுடிபான்
வேறுபடுவதில்லை.    கருத்துக்கள்     பொருள்களின்      இயக்கத்தால்
விளைவனவாதலின்  வினைமுடிபு   நோக்கி    அஃறிணையுள் ஒன்று பல
என்னும்    இருபகுப்பே     கொண்டனர்     தமிழ்நூலார்.   அங்ஙனம்
கொண்டனரேனும் பெயரளவில்  அவற்றின்  ஆண் பெண் வேறுபாட்டினை
ஓராற்றான்  உணரக்  களிறு,  பிடி,  சேவல், பேடை  என இயற்பெயரான்
பகுத்துணர்த்தியும், "ஆண்பா  லெல்லாம்    ஆணெனற்  குரிய பெண்பா
லெல்லாம்   பெண்ணெனற் குரிய    காண்ப   அவைஅவை அப்பாலான
[மரபியல்-51] என அவற்றின் தன்மையுணர்த்தியும், பாலுணரவைத்தனர் என
அறிக.
   

இனி, நன்னூல் முதலிய பின்னூல்கள் ஆடூஉவறிசொல் மகடூஉவறிசொல்
என்றாற்  போலச்   செம்பொருள்தரும்  வாய்பட்டாற்   பெயர்  கூறாமல்
ஆண்பால்,   பெண்பால்    எனக்   கூறினர்.  ஆண்-பெண்   என்பவை
அஃறிணைக்கும்  உரிய    பொதுப்பெயர்களாய் நிற்றலை அவை மறந்தன.
இங்ஙனம் கூறுதல் மயங்கவைத்தலும் விழுமியது பயவாமையுமாம்.