சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

11

பாரும்உளர்.  இவர் கி. பி. 6  அல்லது  8  ஆம்  நூற்றுண்டினர் எனத்
தெரிதலாலும்,  தொல்காப்பிய  உரையாசிரியர்  ஆகிய கல்லாடர் கி. பி.
12  ஆம்  நூற்றாண்டுக்குப்  பிற்பட்டவர்   ஆதலினா   லும் வேறாவர்
என்பதே தெளிவாம்.

மூன்றாமவர் :- இவரே நம் உரையாசிரியர் ஆவர். இவரைப் பற்றிய
வரலாறு  ஒன்றும்  தெரிந்திலது.  கல்லாடம்  என்பது ஓர் ஊர் என்றும்,
அங்கு  இறைவன்  உமையொரு  பாகனாய்  இனி  திருந்து அருளினன்
என்றும் திருவாசகத்தால் அறிகின்றோம்.

“கல்லா டத்துக் கலந்தினி தருளி
நல்லா ளோடு நயப்புற எய்தியும்”
                       (கீர்த்தித் திருஅகவல் -11-12)

என்பது  அத்திருவாசகப்  பகுதியாகும்.  இத்திருப்பதி  பாண்டி நாட்டில்
உள்ளது என்ப. இஃது ஒரு .சிவத்தலம்.  இவ்வூரில் பிறந்தவராதல் பற்றி
இவர்   இப்பெயர்   பெற்றனரோ?   அன்றிக்    கல்லாடர்   என்னும்
பெயருடையார்   இருவர்    இவருக்கு   முன்னிருந்தனர்  ஆதலானும்,
அவர்கள்   இருவரும்   புகழ்பட   வாழ்ந்த  பெருமக்கள் ஆதலானும்,
அவர்கள்   நினைவாக   இவருக்கும்  இயற்பெயராகப் பெற்றோர்களால்
இடப்பட்டதோ ? அறியோம்.

(2)நாடு :- “செப்பும்  வினாவும்   வழா  அல்  ஓம்பல்” என்னும்
நூற்பாவில்  இளம்பூரணர்   செப்பு  வினா  ஆகிய  ஈரிலக்கணத்திலும்
வழுவாது  வந்தமைக்கு  நும்  நாடு  யாது  எனில்  தமிழ்நாடு  என்றல்
என்ற  எடுத்துக்காட்டினைக்  காட்டினர்.  ஆனால்  கல்லாடரோ  இதே
நூற்பாவில்,   செப்பு   வினா    என்றவற்றுள்,   செப்பு    மறுத்தலும்
உடன்படுதலும்  என   இருவகைப்படும்  என்றும்,   ‘நும்  நாடு  யாது?
என்றாற்குப்  பாண்டி  நாடு’   என்றாற்   போல்வன  இவ்விரண்டினுள்
அடங்காது   எனினும்  ஒரு   வகையான்  அடக்கிக்   கொள்ளப்படும்
என்றும்  கூறியுள்ளார்.  ஆதலின்   இவர்  பாண்டி  நாட்டவரோ? என
ஐயுற இடன் உள்ளது.

(3)சமயம் :- “தெய்வம்  சுட்டிய  பெயர்நிலைக்  கிளவி”  என்னும்
பகுதிக்கு  இளம்பூரணர்   எடுத்துக்காட்டியவாறே  இவரும் ‘வாசுதேவன்
வந்தான்,  திருவினாள் வந்தாள்’ எனக்  காட்டுகின்றார்.  ஆனால் ‘அக’
ஆம் நூற்பாவில் ‘நிலை’ என்பதற்கு எடுத்துக்  காட்டுத்  தருங்கால், பிற
உரையாசிரியரினின்றும்  முற்றிலும்   வேறுபட   எடுத்துக்காட்டுகின்றார்.
‘நிலை    என்பதற்குச்   சாத்தனது   நிலை’    என    இளம்பூரணர்,
சேனாவரையர்,   நச்சினார்க்கினியார்   ஆகிய   மூவரும்   உதாரணம்
காட்டினார்.  தெய்வச்சிலையார்  ‘நிலை  என்பது  அவரவர்  நிலைமை
குறித்து  வருவது  என்றும், அது சாத்தனது  இல்வாழ்க்கை,  சாத்தனது
தவம் எனவரும்’ என்றும் காட்டினார். ஆனால்