சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

81

(இ - ள்.) பல நெறியாக  அவ்வவ்  வேற்றுமையின்  பொருளோடு
பொருந்தி  ஒலிக்கும்  எவ்வகைப்பட்ட  சொல்லும் வேற்றுமைபோலப்
பிரியாது இறுதிக்கண் விரிந்து நிற்றற்குரிய, (எ - று.)

விரித்தற்குரிய என்பது, முன்னின்ற அதிகாரத்தால் கொள்க. இனித்
தொகுத்தலும்   உரிய  என்பது,  ஒன்றென  முடித்தல்  என்பதனால்
கொள்க.

(எ - டு.) படைக்கை  என்பது  படையினைப்  பிடித்த  கை என
விரிந்தது. குதிரைத் தேர் என்பது குதிரையாற் பூட்டப்பட்ட தேர் என
விரிந்தது. பிறவும் அன்ன. ஆறாவதற்குப் பொருள்விரிதல் இல்லை.

உருபுகள் தொகுத்தலும் விரிதலும் கூறியவழியே அவ்வுருபுநோக்கி
வரும்  சொற்கள்  தொகுத்தலும்  விரித்தலும்  அடங்குமால்  எனி்ன்,
அவ்வுருபு   தொக்குழித்   தொக்கும்,  விரிந்துழி  விரிந்தும்  நிற்றல்
ஒருதலையன்மையின், அதற்கும் வேறு கூறவேண்டும் என்பது.

மரம்  குறைத்தான், குழையை   உடையன்;   உருபு  தொக்குழித்
தொகாதாயிற்று எனக் கொள்க.                            (23)

வேற்றுமையியல் முற்றும்.