சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

83

(இ - ள்.) சினையாகிய    நிலைமையையுடைய   பொருண்மைக்கு
இரண்டாவதும்  ஏழாவதும் அதன் வினைக்கூறு நிலைமைக்கண் ஒத்த
பொருள் என்று கூறுவர் புலவர், (எ - று.)

(எ - டு.)கண்ணைக்குத்தினான், கண்ணின் குத்தினான் என வரும்.

சினைக்கண்     இவ்விரண்டும் வரும் என்றது என்னை,   பிறவும்
வருமால்   எனின்,  முன்  இடப்பொருட்கண்வரும்  என்ற  ஏழாவது,
மற்றொரு      வேற்றுமையோடு      தொடர்ந்து      கூறும்வழிச்
செயப்படுபொருட்கண்   வருதலும்  கண்டு  அது  கூறியவாறு  எனக்
கொள்க.  தொடர்ந்து  கூறும்  வழியாமாறு  உணரச் சொல்லுகின்றார்.
வினைநிலை  என்றது  இரணட்£வதற்கு ஓதிய வினை, வினைக்குறிப்பு
என உணர்க.                                           (2)

இதுவுமது
 

88.

கன்றலும் செலவும் ஒன்றுமார் வினையே.
 

என் - எனின், இதுவும்  அவ்விரண்டன்  மயக்கமே உணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) மேற்கூறிய  இரண்டாவதற்கும்  ஏழாவதற்கும் கன்றல்
என்னும்   பொருண்மையும்,   செலவு   என்னும்   பொருண்மையும்
பொருந்திவரும் அவ்வுருபுகளது வினை கூறுமிடத்து, (எ - று.)

(எ - டு.) சூதினைக்    கன்றினான்,    சூதின்கண்  கன்றினான்;
நெறியைச் சென்றான், நெறிக்கண் சென்றான் எனவரும்.         (3)

முதல் சினைப் பெயர்களில் வரும் உருபுகள்
 

89.

1முதல்சினைக் கிளவிச் கதுஎன் வேற்றுமை
முதற்கண் வரினே சினைக்கை வருமே.
 

என்    - எனின், வேற்றுமைக்கண்ணதோர் சொல்லுதல் வகைமை
உணர்த்துதல்  நுதலிற்று. மேற்கூறிய சினைநிலைக்கிளவி  என்பதுற்குப்
புறனடை எனினும் அமையும். முதற்பொருட்கும் முதலோடு தொடர்ந்த
சினைப்பொருட்கும் உருபுகள் வருமாறு கூறினாராம்.

(இ - ள்.) அது என்   வேற்றுமை  முதற்கண்   வரின்   அதன்
சினைக்கு இரண்டாம் வேற்றுமை வரும், (எ - று.)


1 இதனையும் அடுத்த நூற்பாவையும் ஒரே நூற்பாவாகக் கொள்வர்
தெய்வச்சிலையார்.