இனி, அன்னபிறவும் என்றதனால் ஊரிற்சேயன் என்புழி, ஊர்க்குச் சேயன் என்றாயிற்று. காட்டிற்கணியன் என்பதும் அது. இவையெல்லாம் உருபும் பொருளும் உடன் மயங்கின எனக்கொள்க. மற்று இம் மயக்கம் ‘அன்ன பிறவும்’ என்புழி அதிகாரத்தானே அடங்காதோ எனின், அஃது ஒன்றனோடு ஒன்று பரிமாறும் அதிகாரத்தது; இஃது ஒன்று பலவற்றோடு சென்று மயங்ககும் அதிகாரத்தது; ஆகலின் அதனுள் அடங்காது என்ப. (27) மற்றையுருபுகளும் தம்முள் மயங்குமெனல் |
என் - எனின், நான்காவ தொழித்து ஒழிந்த வேற்றுமை மயங்குமாறு உணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) நான்காவது ஒழிந்த உருபுகள் ஐந்தும், நான்காவது போலப் பல வேற்றுமைப் பொருட்கண்ணும் சென்று மயங்குமிடத்துக் குற்றம் இல்லை. அவ்வாறு சொல்லிவரும் வழக்குமுறைமைக்கண், (எ -று.) வழக்கினுளவேல் கண்டுகொள்க என்பன காணமையின் காட்டா மரபினவாம். (28) வினைச் சொல்லிலக்கணம் |
என் - எனின், வினைச்சொல்லிலக்கணம் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) தொழிலினையும், தொழில் நிகழ்த்தும் கருத்தா வினையும், அவனால் செய்யப்படு பொருளினையும், அவன் தொழில் நிகழ்த்தற்கு இடமாகிய நிலத்தினையும், அதற்கு இனமாகிய
1 மானம் - குற்றம் என்றே உரை கொண்டனர் அனைவரும். ஆனால், ‘ஆனம்’ என்ற சொல்லிற்கே குற்றம் என்ற பொருள் உண்டு என்றும், எனவே மானம் என்பது ‘ஆனம்’ என்றிருத்தல் வேண்டும் என்றும் கூறுவர் திரு.பி.சா.சு.அவர்கள். |