சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

107

என்னை,  வேண்டா  கூறியவாறு  எனின்  அவைதாம்  இ உ ஐ ஓ
என்புழி  இந்நான்கு  ஈறும் விளியேற்கும் ஒழிந்த உயிரீறு   விளியேலா
என்பது   பெற்றமையின்  என்பது.   இனி  வேண்டியது   முடித்தவாறு
என்னை  யெனின், ஒழிந்த உயிரீறு  வேற்றுமை ஏலா என்று   இன்னும்
மேற் சொல்லிய உயிரீறு விளியேற்கும் என்றமையின்.

(இ - ள்.) மேற்கூறிய  நான்கு  உயிரீறே யன்றி  ஒழிந்த உயிரீறுகள்
உயர்திணைப்  பெயரிடத்துத்   தாம்  விளித்தலைக்   கொள்ளா என்று
சொல்லுவர் புலவர், (எ - று.)

இவ்விதி  மேலே   பெற்றாமன்றோ   எனின்,  மேற்  கூறியவாறன்றி
விளியேற்கும் என்பது கருத்தெனக் கொள்க.

கணி -  கணியே  என இகரஈறு ஏகாரம் பெற்றது. பிறவும் வந்தவழிக்
கண்டு கொள்க.                                            (7)

இகரஈற்று அளபெடைப் பெயர் விளியேற்குமாறு
 

128.

அளபெடை மிகூஉம் இகர இறுபெயர்
இயற்கைய வாகும் செயற்கைய என்ப.
 

என் - எனின்,  எய்தியது விலக்கிப்  பிறிது விதி வகுத்தல் நுதலிற்று;
என்னை? ஈகாரமாதல் விலக்கி இயல்பாய் விளியேற்கும் என்றமையின்.
 

(இ - ள்.) அளபெடுத்தலான் மிகுகின்ற இகரமாய இறுதியையுடைய
பெயர் இயல்பாய் விளியேற்கும் செய்தியையுடைய, (எ - று.)

(எ - டு.) 1தொழீஇஇஇ, தொழீஇ என்பது பெயர். விளியும் அஃதே
எனக் கொள்க.

இஃது இயல்பு.

இயற்கைய   என்று பன்மை கூறிய அதனான் இவ்வளபெடை மூன்று
மாத்திரையில்  நிமிர்ந்து  நிற்கும்   என்று கொள்ளப்படும். செயற்கைய
என்றதனான்  இவ்வளபெடைப்   பெயர்  எழுதும்வழி ஐந்தெழுத்திட்டு
எழுதுக என்று கொள்ளப்பட்டது.                             (8)

முறைப்பெயரில் ‘ஐ’ ஈறு ஆ வாகவும்வருதல்
 

129.

முறைப்பெயர் மருங்கின் ஐயென் இறுதி
ஆவொடு வருதற் குரியவும் உளவே.
 


1. தொழீஇஇஇ -  காண்டற்றொழிலை  யுடையவளே,  கலி,  103, 40
வரி, நச், உரை.