[பெயரியல்]சொல்லதிகாரம் தெய்வச்சிலையார்105

105

திணை உணர்த்துவதோர் சொல்லின்மையிற் பால் எனவே திணையும் அடங்கும்.

இதுவும் அது

184.

1அவற்றுள்
நீ என் கிளவி ஒருமைக் குரித்தே
ஏனைக் கிளவி பன்மைக் குரித்தே.

மேலதற்கோர் புறநடை உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். நீ என்னும் பெயர் இருதிணைக் கண்ணும் ஒருமை விளக்குதற்கு உரித்து. நீயிர் என்னும் பெயர் பன்மை விளக்குதற்கு உரித்து, எ - று.

எ - டு. நீ வந்தாய், நீயிர் வந்தீர் என்றவழிப், பால் விளங்காது ஒருமை பன்மை விளங்கியவாறு கண்டுகொள்க. அன்ன பிறவாற் கொள்ளப்படுவன: முதியான் என்பது பிராயம் பற்றி வரும். அது முதியான் வந்தது, முதியான் வந்தான் என வரும். சுமையான் என்பது தொழில்பற்றி வந்தது. சுமையான் வந்தது சுமையான் வந்தான் என வரும். பிறவுமன்ன.

(34)

ஒருவர் என்பது உயர் இருபாற்கும் பொது

185.

ஒருவர் என்னும் பெயர்நிலைக் கிளவி
இருபாற்கு முரித்தே தெரியுங் காலை

உயர்திணைப் பொருட்கண் விரவுப் பெயரிலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒருவர் என்று சொல்லப்படுகின்ற பெயர்ச்சொல் உயர்திணைக்கண் ஆண்பாற்கும், பெண்பாற்கும் உரித்து ஆராயுங் காலத்து, எ - று.

(35)

ஒருவர் என்பது பன்மை வினைகொள்ளல்

186.தன்மை சுட்டிற் பன்மைக் கேற்கும்.

மேலதற்கோர் முடிபு உணர்த்துதல் நுதலிற்று.

இ - ள். ஒருவர் என்னும் பெயரின் தன்மையைக் கருதில், பன்மைவினை கோடற்குப் பொருந்தும், எ - று.

எ - டு. ஒருவர் வந்தார்.

(36)

நீயிர், நீ, ஒருவர் என்பவற்றின் பால் தெரியுமாறு

187.

இன்ன பெயரே இவையெனல் வேண்டின்
முன்னம் சேர்த்தி முறையின் உணர்தல்


1. இதனை இரு சூத்திரமாகக் கொள்வர் ஏனை உரை யாசிரியர்கள்.