சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

116

என்  -   எனின்,  விரவுப்  பெயர்  விளியேற்குமாறு  உணர்த்துதல்
நுதலிற்று.

மேல் உயர்திணைப் பெயர்க்கண் விளியேற்கும் எனப்பட்ட உயிரீறு
நான்கினையும்  புள்ளியீறு    நான்கினையும்    தமக்கு   ஈறாகவுடைய
உயர்திணைப்  பெயரோடு    அஃறிணை    விரவி  வரும்  பெயர்கள்
அவ்வீறுகளில் எடுத்தோதின  முறைமையையுடைய  விளிக்குங்  காலத்து
(எ - று.)

(எ - டு.) சாத்தி  -  சாத்தீ ; தந்தை - தந்தாய் ; பூண்டு . பூண்டே
எனவரும்.

ஓகாரவீற்று    விரவுப்பெயர் கண்டதில்லை. இவை உயிர் ஈறு. இனிப்
புள்ளியீறு,  சாத்தன்  - சாத்தா,  கூந்தல் - கூந்தால்  எனவரும். ரகார,
ளகார ஈறாய் வரும் விரவுப்பெயர் கண்டதில்லை.                (33)

அஃறிணைப் பெயர்கள் விளி ஏற்குமாறு
 

154.புள்ளியும் உயிரும் இறுதி யாகிய
அஃறிணை மருங்கின் எல்லாப் பெயரும்
விளிநிலை பெறூஉங் காலந் தோன்றின்
தெளிநிலை உடைய ஏகாரம் வரலே.
 

என்  -   எனின்,     உயர்திணைப்பெயரும்     விரவுப்பெயரும்
விளியேற்குமாறு உணர்த்தி, இனி அஃறிணைப்  பெயர்  விளியேற்குமாறு
உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)   புள்ளி      யெழுத்தினையும்    உயிரெழுத்தினையும்
ஈறாகவுடைய     அஃறிணையிடத்து    எல்லாப்பெயர்களும்   விளிக்கு
நிலைமை  பெறுங்கால  முண்டாயின் அவ்விடத்து  ஏகாரம்  வருதலைத்
தெளியப்படுநிலையை யுடையன, (எ - று.)

(எ - டு.) நரி  - நரியே ; புலி - புலியே; அணில், அணிலே ; மரம்
- மரமே எனவரும்.

“வருந்தினை  வாழி   நெஞ்சம்”   எனவும்   “காட்டுச்  சாரோடுங்
குறுமுயால்”  எனவும்  பிறவாறும்   விளியேற்று  வந்தனவால்  எனின்,
அவ்வாறு  வருவன  வழக்கினகத்து   இன்மையின்   அவை   செய்யுள்
விகாரமெனக் கொள்க.

“விளிநிலை  பெறூஉங்    காலந்தோன்றின்”    என்றது    அவை
விளியேற்கு   நிலைமை    சிறுபான்மை   யென்றது   என   உணர்க.
தெளிநிலையுடைய   என்றது   அவ்வேகாரம்   பற்றி  .............................க்
கூறியதாகக் கொள்க.                                       (34)