என் - எனின், மேற்கூறிய மூவகைப் பெயர்க்கும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் நுதலிற்று. (இ - ள்.) மேல் விளியேற்றற்குதியனவாக எடுத்தோதப்பட்ட எல்லாப் பெயர்களும் தத்தம் மாத்திரையின் மிக்கிசைக்கும் விளிக்குங் காலத்து; யாண்டுமோ எனின், அற்றன்று, சேய்மைக்கண் இசைக்கும் வழக்கிடத்து, (எ - று.) (எ - டு.)நம்பீஇ, சாத்தாஅ எனவரும். வரையறை இன்மையின் வேண்டியவாறு அளபெழும் எனக்கொள்க. ஆயின், உயிர் பன்னிரண்டு மாத்திரையும், ஒற்றுப் பதினொரு மாத்திரையும் எனக் கொள்க. (35) அம்மா என்னும் சொல் விளி ஏற்குமாறு |