சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

121

னான்  இச்சொல்லினது  பொருள்   இது  என   அறிய  நிற்றலும் என
இருபகுதித்து என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.) இடா, திடா என்பன தெரிபு வேறுநிலையல்,  சோறுண்ணா
நின்றான், கற்கறித்து நன்கு அட்டாய் என்றல் குறிப்பிற்றோன்றல்.    (3)

நால்வகைச் சொற்களில் சிறப்புடையன இவை எனல்
 

161.1சொல்லெனப் படுப பெயரே வினையென்
றாயிரண் டென்ப அறிந்திசி னோரே.
 

என் -  எனின்,  மேற்  பொருளுணர்ந்து மெனப்பட்ட சொல்லிற்குப்
பெயரும் முறையும் தொகையும் உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  சொல்லென்று       சிறப்பித்துச்     சொல்லப்படுவன
பெயர்ச்சொல்லென்றும்.   வினைச்சொல்   லென்றும்   அவை  யிரண்டு
மென்று சொல்லுப இலக்கணம் அறிந்த ஆசிரியர், (எ - று.)

பெயர்ச்சொல்  பொருளை  உணர்த்துதலின்     முற்  கூறப்பட்டது.
வினைபொருளது  புடைபெயர்ச்சியாகிய   தொழிலினை   உணர்த்தலின்
சிறப்பினவல்ல என்று பிற்கூறப்பட்டது.

என சிறப்பின்கண் வந்தது.                               (4)

இடைச்சொல்லும் உரிச்சொல்லும்
 

162.இடைச்சொற் கிளவியும் உரிச்சொற் கிளவியும்
அவற்றுவழி மருங்கின் தோன்றும் என்ப.
 

என் - எனின், இறந்ததுகாத்தலை நுதலிற்று.

(இ - ள்.)   இடைச்சொல்லாகிய   சொல்லும்   உரிச்  சொல்லாகிய
சொல்லும் பெயர்வினைகட்கு இடமாகிய இடத்தே  தோன்றும்;  தாமாகத்
தோன்றா, (எ - று.)

இடைச்சொல்  முற்கூறிய  காரணம்  என்னை எனின் எழுகூற்றதாகிய
வழக்குப் பயிற்சி நோக்கி என்க.

மருங்கு  என்றதனான்   அவ்விடை  யுரிகள்   பெயர்  வினைகளை
அடைந்து   தோன்றுங்கால்   தம்மருங்கினால் தோன்றுதலும் பெயரதும்
வினையதும்   மருங்கினால்   தோன்றுதலும்  என  இருவகை  என்பது
கொள்ளப்படும்.

அதுமன்,  உறுகால்   என்பன   தம்மருங்கிற்  றோன்றின.  அவன்,
அவள், உண்டான், உண்டாள் என்பது அவற்றமருங்கிற்றோன்றின.


1.‘சொல்லெனப்படுவ’ என்பதும் பாடம்.