சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

125

என்  -   எனின்,   இதுவும்   உயர்திணை   யொருசார்பெயர்களை
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  எல்லாரும்   என்று    சொல்லப்படுகின்ற  படர்க்கைப்
பெயர்ச்சொல்லும்,   எல்லீரும்  என்று  சொல்லப்படுகின்ற முன்னிலைப்
பெயர்ச்சொல்லும்,   பெண்மை    என்னும்   சொல்லை  முன்னெடுத்த
பெண்மகன்    என்னும்    பெயர்ச்சொல்லும்    இவை      மூன்றும்
அவைபோலப் பாலறியவந்த உயர்திணைப் பெயராம், (எ -று.)

நாணுவரை     யிறந்தாள்   தன்மையளாகிப்   புறத்துப்     போய்
விளையாடும்   பெண்மகளைப்   பெண்மகன்   என்பது    முற்காலத்து
வழக்கம்.    அதனை   இப்பொழுது    மாறோக்கத்தார்   வழங்குவர்.
மாறோக்கம் என்பது கொற்கை சூழ்ந்த நாடு.                    (10)

இதுவுமது
 

168.நிலைப்பெயர் குடிப்பெயர் குழுவின் பெயரே
வினைப்பெயர் உடைப்பெயர் பண்புகொள்பெயரே
பல்லோர்க் குறித்த முறைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த சினைநிலைப் பெயரே
பல்லோர்க் குறித்த திணைநிலைப் பெயரே
கூடிவரு வழக்கின் ஆடியற் பெயரே
இன்றிவர் என்னும் எண்ணியற் பெயரே
டன்றி அனைத்தும் அவற்றியல் பினவே.
 

என்   -   எனின்,   இது   உயர்திணையொருசார்ப்   பெயர்களை
உணர்த்தல் நுதலிற்று.

(இ - ள்.)  அருவாளன்  சோழியன்  என்றாற்போல ஒருவன் தான்
பிறந்த  நிலத்தினாற்   பெற்ற   பெயர்களும்,  மலையமான்  சேரமான்
பார்ப்பான்  அரசன் என்றாற்போல அவன்  தான் பிறந்தகுடியாற்பெற்ற
பெயர்களும்,   அவையத்தார்    அத்திகோசத்தார்  வணிககிராமத்தார்
என்றாற்போலத்     தாம்    திரண்ட   திரண்ட  திரட்சியினாற்பெற்ற
பெயர்களும்,    உண்டார்    என்றாற்போல    அவன்தான்  செய்யும்
தொழிலாற்  பெற்ற   பெயர்களும், அம்பர்  கிழாஅன் அம்பருடையான்
எனறாற் போல அவன் தனது உடைமையாற் பெற்ற