சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

126

பெயர்களும், கரியான்  செய்யான்  என்றாற்போலத்  தனது  பண்பினால்
பெற்ற  பெயர்களும், தந்தையார் தாயர் என்றாற்போலப்   பல்லோரைக்
கருதின   தமது   முறையால்    பெற்ற   பெயர்களும்,  பெருங்காலர்
பெருந்தோளர் பெருங்கண்ணீர்  என்றாற்போலப்  பல்லோரைக் கருதின
தமது  சினை  நிலைமையாந்  பெற்ற   பெயர்களும,்   குறவர்  ஆயர்
வேட்டுவர்  என்றாற்போலப்  பல்லோரைக்  கருதின  குறிஞ்சி முதலிய
திணைகளாற்  பெற்ற பெயர்களும், இளந்துணைமகார் தம்மிற் கூடிவரும்
வழக்கின்கண்  அவர்  தமது  விளையாட்டுவகையான்  தாமே   தமக்கு
அப்போதைக்குப்    பட்டிபுத்திரர்    கங்கைமாத்திரர்  என்றாற்போலப்
படைத்திட்டுக்கொண்ட பெயர்களும், ஒருவர் இருவர்  மூவர்   நால்வர்
என்றாற்போல  இத்துணையர்  எனத் தமது  வரையறையுணர   நிற்கும்
எண்ணியல்பினாற்  பெற்ற  பெயர்களும் மேற்கூறிய பெயர்கள் போலப்
பாலறியவந்த   உயர்திணைப் பெயராம்,(எ - று.)               (11)

உயர்திணைப் பெயர்க்குப் புறனடை
 

169.அன்ன பிறவும் உயர்திணை மருங்கில்
பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
என்ன பெயரும் அத்திணை யவ்வே.
 

என்   -   எனில்,  இதுவும்  உயர்திணைப்  பெயருக்குப்  புறனடை
யுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  மேற்கூறிய    அத்தன்மை     பிறவுமாயுள்ள   உயர்
திணையிடத்துப்  பன்மையும்   ஒருமையுமாகிய  பால்களை  அறியவந்த
எல்லாப் பெயர்களும் அவ் வுயர்திணைக்குரிய பெயர்களாம், (எ - று.)

(எ - டு.)ஏனாதி, வாயிலான், வண்ணத்தான், சுண்ணத்தான்,  பிறன்,
பிறள்,  பிறர்,  தமன், தமள், தமர், நுமன்,   நுமள், நுமர்,  மற்றையான்,
மற்றையாள், மற்றையார் எனவரும். பிறவும் அன்ன.              (12)

அஃறிணைப் பெயர்கள்
 

170.அதுஇது உதுஎன வரூஉம் பெயரும்
அவைமுத லாகிய ஆய்தப் பெயரும்
அவைஇவை உவைஎன வரூஉம் பெயரும்