பெயர்ச் சொற்களும், பொன்னன்னது பொன்னன்ன என்றாற் போல உவமத்தினாற் பெற்ற பெயர்ச் சொற்களும், உட்பட அக் கூறறொன்பதும் மேற்கூறிய பெயர்போலப் பாலறிய வரும் அஃறிணைப் பெயர்களாம், (எ - று.) அஃறிணை இயற்பெயர் |
என் - எனின், இதுவும் பாலறிய வரும் அஃறிணை யொருசார்ப்பெயர்களையுணர்த்துதல் நுதலிற்று. (இ - ள்.) கள் என்னும் வாய்பாட்டோடு பொருந்தும் அவ்வஃறிணையியற் பெயர்கள் பலவறி சொல்லாதற்குக் கொள்ளும் இடமுடைய, (எ - று.) கள்ளொடு சிவணின் இயற்பெயர் பலவறி சொல்லாகக் கொள்ளுமிட முடைய எனவே, கள்ளொடு சிவணாத பெயர்கள் பலவறி சொல்லாகக் கொள்ளப்படாத ; ஒருமைக்கும் பன்மைக்கும் பொதுவாய் நிற்கும் என்றவாறு. (எ - டு.) நாய்கள், ஆக்கள் எனப் பன்மை யுணர நின்றன ; நாய் ஆ எனக் கள்ளொடு சிவணாமையிற் பொதுவாய் நின்றன எனக் கொள்க. (15) அஃறிணைப் பெயர்க்குப் புறனடை |
என் - எனின், இஃது அஃறிணைப் பெயர்க்குப் புறனடை உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) அத்தன்மையன பிறவுமாகிய அஃறிணையிடத்துப் பன்மையும் ஒருமையுமாகிய பால்களை அறிய வந்த எல்லாப் பெயர்களும் அவ்வஃறிணைக்குரிய பெயர்களாம், (எ - று.) (எ - டு.) ஆ, நாய், கழுதை, ஒட்டகம், புலி, புல்வாய் எனச் சாதி பற்றி வருவன வெல்லாங் கொள்க. நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்பன அவற்றின்பாற்படும். உண்டல், தின்றல் எனப் பால்காட்டாத தொழிற் பெயரும், கருமை செம்மை யெனப் பால்காட்டாத பண்புப் |