சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

132

முறைப்பெயர்க் கிளவி இரண்டா கும்மே
ஏனைப் பெயரே தத்தம் மரபின.
 

என் - எனின்,    மேல்    தொகுத்தோதின   விரவுப் பெயர்களை
விரித்தோதுதல் நுதலிற்று.   

(இ - ள்.) மேல்  ஓதப்பட்டவற்றுள் இயற்பெயரெனப்பட்டது நான்கு
வகைப்படும்.   சினைப்பெயர்    எனப்பட்டது   நான்கு   வகைப்படும்.
சினைமுதற்   பெயரினையும்   நான்கு   வகைப்படும்  என்று  கூறுவர்
ஆசிரியர். முறைப் பெயர்க்   கிளவி எனப்பட்டது இரண்டு வகைப்படும்.
இவ்வாறு       இவை        வகைப்பட்டமையின்       ஏனையவும்
அவ்வகைப்படுங்கொல்  என்று   ஐயுறின்,  அவ்வகைப்  படாது ஒழிந்த
பெயர்கள்  ஐந்தும்   அவ்வோதிய  வாய்பாடேயாகும் மரபினையுடைய,
(எ - று.)  

மேல் தொகையான்   ஒன்பது  எனப்பட்ட  விரவுப்பெயர்  இவ்விரி
நிலையால் பத்தொன்பதாயின எனக் கொள்க.                  (21)  

இயற்பெயர் நான்கு எனல்
   

179.

அவைதாம்,
பெண்மை இயற்பெயர் ஆண்மை இயற்பெயர்
பன்மை இயற்பெயர் ஒருமை இயற்பெயரென்
றந்தான் கென்ப இயற்பெயர் நிலையே.
 

என் - எனின்,  மேல்  இயற்பெயர்  நான்கு என்றமையின் அவற்றது
பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று.  

(இ - ள்.) அவ்வாறு  வகுக்கப்பட்டனதாம் யாவை எனின் பெண்மை
இயற்பெயரும்,   ஆண்மை    இயற்பெயரும்,  பன்மை   இயற்பெயரும்,
ஒருமை  இயற்பெயரும்   என்று  சொல்லப்  பட்ட அந்நான்கும் என்ப
இயற்பெயரது  நிலைமையை,  (எ - று.)                      (22)  

சினைப்பெயர் நான்கு எனல்
 
  

180.

பெண்மைச் சினைப்பெயர் ஆண்மைச் சினைப்பெயர்
பன்மைச் சினைப்பெயர் ஒருமைச் சினைப்பெயர்
றந்நான் கென்ப சினைப்பெயர் நிலையே.