என் - எனின், சினைப்பெயர் நான்கு என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) பெண்மைச் சினைப்பெயரும், ஆண்மைச் சினைப்பெயரும், பன்மைச் சினைப்பெயரும், ஒருமைச் சினைப்பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுப சினைப்பெயரது நிலைமையை, (எ -று.) (23) சினை முதற்பெயர் நான்கு எனல் |
181. | பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஆண்மை சுட்டிய சினைமுதற் பெயரே பன்மை சுட்டிய சினைமுதற் பெயரே ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரென் றந்நான் கென்ப சினைமுதற் பெயரே. |
என் - எனின், சினைமுதற்பெயரும் நான்கு என்றமையி்ன் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) பெண்மை சுட்டிய சினைமுதற் பெயரும், ஆண்மை சுட்டிய சினைமுதற்பெயரும், பன்மை சுட்டிய சினைமுதற் பெயரும், ஒருமை சுட்டிய சினைமுதற் பெயரும் எனப்பட்ட அந்நான்கும் என்று சொல்லுப சினைமுதற்பெயர், (எ - று.) (24) முறைப் பெயர் இரண்டு எனல் |
182. | பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப் [பெயரென் றாயிரண் டென்ப முறைப்பெயர் நிலையே. |
என் - எனின், முறைப்பெயரும் இரண்டு வகைப்படும் என்றமையின் அவற்றது பெயரும் முறையும் உணர்த்தல் நுதலிற்று. (இ - ள்.) பெண்மை முறைப்பெயரும், ஆண்மை முறைப்பெயரும் எனப்பட்ட அவ்விரண்டும் என்று சொல்லுப முறைப் பெயரது நிலைமையை, (எ - று.) (25) பெண்மை சுட்டிய பெயர் |
183. | பண்மை சுட்டிய எல்லாப் பெயரும் ஒன்றற்கும் ஒருத்திக்கும் ஒன்றிய நிலையே. |