சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

19

(உ) ஆசிரியரின் வாய்மை :

இவர்  ஒன்றற்குக்  காரணம்  கூற  முற்படுங்கால், தமக்குத் தெரிந்த
காரணத்தை   மட்டும்  சொல்லி,   “பிறிது  காரணம்  உண்டாயினும்
அறிந்திரம்” 
 என்று   உரைப்பதும்  உண்டு.  222 ஆம் நூற்பா உரை
காண்க.

6 பதிப்பு நலன் :

தொல்காப்பிய      எழுத்ததிகாரத்திற்கு    இளம்பூரணர்    உரை,
நச்சினார்க்கினியர்  உரை  ஆகிய  இரண்டும்  முன்னமேயே  கழகவழி
வெளிவந்துள்ளன.

சொல்லதிகாரத்திற்கு   உரிய சேனாவரையர் உரை வித்து வான் ஆ.
பூவராகம்  பிள்ளையவர்கள்   எழுதிய   விளக்கவுரை யோடு பன்முறை
கழகவழி   வெளிவந்துள்ளது.    நச்சினார்க்கினியர்   உரையும்   எமது
விளக்கவுரை,  நச்சினார்க்கினியர்   உரைத்திறன்  ஆகியவற்றுடன் 1962
ஆகஸ்டுத்  திங்களில்  முதன்முதலாகக்   கழகவழி   வெளிவந்துள்ளது.
இளம்பூரணர்     உரையும்      எமது      ஆராய்ச்சி    முன்னுரை,
விளக்கவுரைகளுடனும்,    அடிக்குறிப்பு,  பாடபேதங்களுடன்  திருந்திய
பதிப்பாய்   1963   மேத்  திங்களில்   கழக   வழி  வெளிவந்துள்ளது.
தெய்வச்சிலையார் உரையும் இளம்பூரணர்  உரை  போன்றே ஆராய்ச்சி
முன்னுரை,  விளக்க  வுரைகளுடனும்,   தக்க   அடிக்   குறி்ப்பு,  பாட
பேதங்களுடனும்  திருந்திய  பதிப்பாய்   1963   திசம்பர்த்   திங்களில்
கழகவழி  வெளி வந்துள்ளது. இக்கல்லாடர்  உரையும்  இங்ஙனமே தக்க
அடிக்  குறிப்பும்  பாட பேதங்களும்  குறிக்கப்பட்டும்,  நூற்பாக்களுக்கு
அவற்றின்  பொருள்  விளங்கத்  தலைப்பிட்டும்,   பிறர்  உரைகளோடு
ஒப்பிட்டு   மகிழத்தக்க   விளக்கவுரையுடன்  இந்   நாளில்  கழகவழி
வெளிவருகின்றது.

பொருளதிகாரத்திலும்    செய்யுளியல் நச்சினார்க்கினியம் நீங்க லாக
ஏனைய   உரைகள்  எல்லாம்  நம்   கழகவழி   முன்னமேயே  வெளி
வந்துள்ளன.  அச்செய்யுளியல்  தாமும்  இன்்னுஞ்  சின்னாளில்  வெளி
வர இருக்கின்றது. திருவருள் முன்னிற்பதாகுக.

இக் கல்லாடர்  உரையைப்  பதிப்பித்து   வரும்   பொழுது,  எனது
பேரன்பிற்குரியவர்களும்,  கழக   ஆட்சியாளருமான  உயர் திருவாளர்,
வ.  சுப்பையா பிள்ளை அவர்கள் பல  பிரதிகள்  தந்து  உதவினார்கள்.
அவற்றிற் கண்ட பிழை திருத்தங்கள், வேறு  பாடுகள் ஆகிய  வற்றைப்
பிற் சேர்க்கையாகச் சேர்த்துள்ளேம்.

சொல்லதிகாரத்தைப் பொறுத்தமட்டில்  இது  ஐந்தாவது உரையாகும்.
இன்னும்  இச்  சொல்லதிகாரத்திற்கு  ஊர், பெயர்