சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

167

வெழுத்தீறன்றிச்    சொல்வாய்பாடாய்    வேறு    வருதலின்   இவை
வேறாகக் கொள்ளப்பட்டன எனக் கொள்க.

உண்ணும்,   தின்னும்  எனப்  பன்மைக்கண்  உம்மீறு  மகரவீற்றின்
வேறுபாடாகக் கொள்க.

லகரவீறு  மறைக்கண் உண்ணல்  என  வரும்.  அல்லீறும், ஆலீறும்
அழேல் என வரும் ஏலீறுங் கொள்க.

ணகரவீற்றுள்  உண்டுகாண்,  சொல்லிக்காண்,  வருங்காண்  என்னும்
காணீறும் கொள்க.

உண்டுபார்     என்பதோ எனின், அஃது ஒரு சொல்லாதலன்றி அத்
தொழிலைச்  செய்து  அதன்  விளைவை  மேற்பார்  என்னும்  ஒருமை
தோன்ற   நிற்றலின்  வேறு  சொல்  என்க.   உண்டுகாண்  என்பதும்,
இவ்வாற்றான் வேறன்றோ எனின், அது சொல்லுவான் கருத்தன்று என்க.

அவன்   வருவன்காண் என்பதோ எனின், ஆண்டு காண்டற்றொழில்
கருத்தன்மையின்  அசைநிலையாகல்  தத்தம்  குறிப்பானே வேறொரு
பொருள் உடைத்தாகலான் எனக்கொள்க.

உண்கிடு  உண்கிடா  என்பனவோ   எனின்   அவை   சான்றோர்
செய்யுட்  கண்   இன்மையிற்   “கடிசொல் இல்லை  காலத்துப் படினே”
(சொல் - 442) என்பதனாற் கொள்ளப்படும்.  அது  முன்னிலையாயவாறு
என்னை  எனின், இவற்றுள் உண்கிடு நீ எனப் பிற  முன்னிலை  போல்
முற்றாய்,    முன்னிலைப்     பெயர்    கொள்வதன்றி   அவனுண்கிடு
என்றானும்,   யான்   உண்கிடு   என்றானும்  பிற  பெயர்  வந்த  பிற
தொழிலினை நீ உடம்படு என்று  முன்னிலை  நீ்ர்மை  தோன்றநிற்றலின்
முன்னிலை யாயிற்றுப்போலும்.

இவற்றுள் உண்கிட  என்பதொருவழி  நீயுண்கிடா  என முன்னிலைப்
பெயர் கொண்டு நிற்றலும் உண்டு.

இனி   உண்ணுங்கோள் என்பதோ எனின், அது உண்ணுங்கள் எனக்
கள்ளொடு,  உண்ணும் என்பது  அசைநிலையடுத்து உம் ஈறு  மரீஇயவா
றெனக் கொள்க.

முன்னிலை      ஈற்றுவகையெல்லாம்       தொகுத்து     நோக்க
எழுத்துவகையான்   இருபத்து நான்கீறும்,  சொல்வகையால் யகரவீற்றுள்
ஆய்  என்பதும்,  ரகரவீற்றுள்  இர்  ஈர் என்பனவும், னகரவீற்று  மின்
என்பதும்,  ணகர வீற்றுக் காண் என்பதும்,  மகரவீற்று  உம்  என்பதும்,
லகரவீற்றுள் அல்,  ஆல், ஏல்  என்பனவும் ஆக முப்பத்து மூன்றாயின,
பிறவாறு உளவேனும் அறிக.                                 (26)

முன்னிலை ஒழிந்த வினைகள்
 

227. எஞ்சிய கிளவி இடத்தொடு சிவணி
ஐம்பாற்கும் உரிய தோன்ற லாறே.