சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

170

வருவனவாகக்  கொள்ளப்படா   என்றவாறு.   எனவே    படர்க்கையிற்
பல்லோர்  படர்க்கை  ஒழித்து  ஒழிந்த  நான்கு  படர்க்கைக்  கண்ணும்
வரும் என்பதாம்.

(எ - டு.)  அவன்  உண்ணும்,  அவள்  உண்ணும், அது உண்ணும்,
அவை உண்ணும் என வரும். அஃதேல்,

“ஓஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
யாஅதும் என்னு மவர்”

எனவும்,

“என்    குறை சொல்ல வேண்டுமா லலவ” எனவும், “யான் போகல்
வேண்டும்”  எனவும்  ஒழிந்த  இடத்தும்   வந்ததால்  எனின், வாராது;
அவற்றிற்  கெல்லாம் சொன்னிலை வேறாகப்  பொருள்  உரைக்கப்படும்
என்பது.

நிகழும் காலம்  என்றது  என்னை?  அவன்  உண்ணும்  என எதிர்
காலத்தும் வருமால் எனின், அது கால மயக்கம் எனக் கொள்க.

நிகழ்    கால வரவு இக்காலத்து இல்லையால் எனின் உண்டு. அவன்
என்  செய்யும்  என்றார்க்கு்  அவன்  இப்பொழுது  ஓதும்  என்றார்
போல்வன நிகழ்காலத்தது எனக் கொள்க.

செய்யும் என்னும்  சொல்தான்  முற்றும் எச்சமும்என  இருவகைத்து,
அவற்றுள்   முற்று  விலக்கியது   ஈண்டை  விலக்கு  எனக்  கொள்க.
முற்றிற்கும் என்பதோர் ஈறாகக் கொள்க.

இதனோடு   முன்கூறிய முற்று ஈறெல்லாம் தொகுத்து  நோக்க, உயர்
திணை  ஈறு  இருபத்து நான்கும், அஃறிணை  ஈறு ஏழும்.  இனி விரவு,
வினை யெச்சமும் பெயரெச்சமும் முற்றும் என மூவகைத்து.

அவற்றுள்  மூன்று ஈறாகிய  முன்னிலையும், வியங்கோளும், இன்மை
செப்பலும், வேறென் கிளவியும்,  செய்ம்மனவும்  ஆகிய   ஐந்துனுள்ளும்
முன்னிலை  ஈறு முப்பத்து  மூன்றும்  வியங்கோள் ஈறு ஏழும்,  இன்மை
செப்பல்   ஈறு  இரண்டும்,  வேறு  என்    கிளவியது   ஈறு  ஒன்றும்,
செய்ம்மன என்பதன் ஈறு ஒன்றும்  ஆக  நாற்பத்து  நாலாம்; பிறவுமாம்.
மேலும் அறிக.                                            (29)

வினையெச்ச வாய்பாடுகள்
 

230. செய்து செய்யூச் செய்பு செய்தெனச்
செய்யியர் செய்யிய செயின்செயச் செயற்கென
அவ்வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி.
 

என் -  எனின்,  இதுவும்  மேல்  எஞ்சியகிளவி என்று ஓதிய பொது
விதியுட்பட்ட வினையெச்சம் என்பதற்கு வாய்பாட்டு வேற்றுமையும்