முதலியன தெரியாத உரையாசிரியர் உரை ஒன்றும் இருப்பதாகத் தெரிகிறது. அதுவும் இந்நூலோடு இணைத்துப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. 7. நன்றியுரை இந்நூல் வெளிவருங்கால் அல்லும் பகலும் அயராது உதவிய வரும், எனது பேரன்பிற்கு உரியவரும், திருப்பனந்தாள் ஸ்ரீ யிலை சுப்பிரமணிய தேசிக சுவாமிகள் உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரு மான திருவாளர், புலவர். மா. விசுவநாதம் அவர்களின் ஊக்கமும் உணர்வும் பெரிதும் பாராட்டுதற்குரியவாகும். அவர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வுரை நூலை அழகியதாக அச்சிட்டு வெளிப்படுத்தி பதிப்புத்துறையில் எனக்கு ஊக்கமூட்டிவரும் திரு. வ. சுப்பையா பிள்ளையவர்களுக்கும் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர்க்கும் எனது இதயம் ஒன்றிய நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். |