சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

171

முடிபு  வேற்றுமையும்  கூறுவான்  தொடங்கி,  அவ்வினையெச்சங்களுள்
சிறப்புடைய வாய்பாடுகளைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) செய்து   என்பது  முதலாகச்  செயற்கு  என்பது  ஈறாக
ஓதப்பட்ட    அக்கூற்று    ஒன்பது   வாய்பாட்டதாம்   முன்  வினை
யெஞ்சுகிளவி என்றோதப்பட்டது, (எ- று.)

அவற்றுள்  செய்தென்பது  முதலாகச்   செய்தென என்பதீறாக அந்
நான்கும்  இறந்தகாலத்தவாகலான்  முன்னே   உடன்  வைக்கப்பட்டன.
அவற்றுள்  செய்தென்பது பெருவழக்கிற்றாகலின்  அவற்றுள்ளும்  முன்
வைக்கப்பட்டது.  அவற்றுள் செய்தென என்பது  அவற்றிற்கு  எல்லாம்
சிறு    வழக்கிற்று    ஆதலானும்,     பிறவினையும்    கோடலானும்
பின்வைக்கப்பட்டது.  இனிச் செய்யியர்  என்பது   முதலாகச்  செற்கு
என்பது   ஈறாக   ஐந்தும்    எதிர்காலத்தவாகலானும்,   பிறவினையுங்
கோடலுண்மையானும்,     பிறவினை     கோடலுமுடைய  செய்தென
வினையின்    பின்னர்    உடன்வைக்    கப்பட்டன.   அவ்வைந்தும்
எதிர்காலத்தவேனும்   செய்யியர் செய்யிய    என்னும்    இரண்டும்
வாய்பாட்டு   வேற்றுமையல்லது    பொருள்    வேற்றுமையின்மையின்
உடன்வைக்கப்பட்டன.  செயின்  என்பது  வாய்பாட்டு வேற்றுமையோடு
பொருள்    வேற்றுமையும்    உடைமையின்    அவற்றின்    பின்னர்
வைக்கப்பட்டது.   செய   என்பது    எதிர்காலத்ததே   யன்றிப்  பிற
காலத்துஞ்   சிறுபான்மை   வருதலான்   அதன்பின்   வைக்கப்பட்டது.
செயற்கு  என்பது    அவைபோல    வழக்குப்பயிற்சி    யின்மையின்
எல்லாவற்றினும் பின்வைக்கப்பட்டது.

இதன்முன்     செய்தென்றோதிய    வாய்பாடு   குற்றியலுகரத்தால்
ஆராயப்பட்ட கடதற  என்னும் நான்கீறும்,  இகரவீறும், யகரவீறும் என
அறுவகைப்பட்டது.   அவ்வறுவகையுஞ்  சய்தெனப்  பொருண்மையால்
ஒன்றாக வைக்கப்பட்டது.

அஃதேல்     செய்யூ,  செய்பு,   சய்தென    என்பனவும்  இதனுள்
அடங்காவோ எனின், அவ்வாறு அடங்குமேனும்  இவற்றிற்கு  வேறுபாடு
உண்டென்று அறிவித்தற்கு வேறோதினார்  என்பது.  யாதோ வேற்றுமை
எனின்,  செய்தென்றதன்   ஈறு  செய்தல்   என்னும்   தொழிற்கண்ணே
செய்து  எனத் தகரவுகர  வீறாயும்,  உண்டல்  என்னுந் தொழிற்கண்ணே
உண்டு  என  டகரவுகரவீறாயும்,  தின்றல்   என்னும்  தொழிற்கண்ணே
தின்று என றகரவுகரவீறாயும்,  புகுதல் என்னுந்   தொழிற்கண்ணே புக்கு
எனக்  ககரவுகரவீறாயும்,  ஓடல்  என்னுந்  தொழிற்கண்ணே  ஓடி  என
இகரவீறாயும்,   தூவுதல்   என்னும்   தொழிற்கண்ணே    தூய்   என
யகரவீறாயும் ஒரு தொழிற்கண்ணே வேறுபட வந்தவாறு.

ஒரு தொழிற்கண்ணே   வேறுபட   வாராமையுடைய   அத்தொழில்
எல்லாவற்றிலும் உழூஉ எனவும், உழுபு எனவும், உழுதென எனவும்;