பொருட்டாயும், மழை பெய்யச் சாத்தன் வந்தான் என உடனிகழ்ச்சியாய் நிகழ்த்தற்கண் இடப்பொருட்டாயும் பிறவாற்றாயும் வரும் என்பது. இனி, ‘துன்னிப் பெரிய வோதினுஞ் சிறிய வுணரா’ (புறம் - 375) என்புழிப் பெரிய சிறிய என்பன பெருமை, சிறுமைப் பண்படியாக வந்தமையின் இவ்வெச்சத்தின் குறிப்பு என்றலும் ஒன்று. இவ்வெச்சப் பொருள் உரிச்சொல் என்றலும் ஒன்று. இனிச் செவ்வன் தெரிகிற்பான் எனவும், புதுவதினியன்ற அணியன் எனவும், புதுவது புனைந்த வெண்கை யாப்பு எனவும், பொய்கைப்பூப் புதிதீன எனவும், பெருங்கயைற்ற வென்புலம்பு எனவும், சிறுநனி நீ துஞ்சியேற்பினும் எனவும், ஒல்லைக்கொண்டான் எனவும், பிறவும் அகரவீறன்றிப் பிறவீறாய் வருவனவும் அவ்வாறே உரைக்கப்படும். இனிக் செயற்கு என்பது உணற்கு வந்தான் என்பது. இஃது அதற் பொருள்டென்னும் பொருள்பற்றி வரும். இது உணல் என்னும் தொழிற் பெயர் நான்காம் உருபு ஏற்றவாறன்றோ எனின், அதுவுமோர் வழக்குண்டு. பெயர்ப்பொருண்மை நோக்கியவழி அதுவாகவும், காலம் நோக்கியவழி வினையெச்சமாகவும் கொள்க. எற்றுக்கு என்பது இதன் குறிப்பு வாய்பாடாகக் கொள்க. (30) இதுவுமது |