சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

177

பொருந்தும்   பிறவினையானும்   தாம்   நடக்குமிடத்து   முடிபுபெறும்
என்று சொல்லுவர் ஆசிரியர், (எ - று.)

(எ - டு.)  மழைபெய்தென  வளம்பெற்றது,  மழை பெய்தென உலக
மார்ந்தது.

மழைபெய்யிய எழுந்தது, மழைபெய்யிய மாதவர் அருளினார்.

மழைபெய்யியர் எழுந்தது, மழைபெய்யியர் மாதவர் அருளினார்.

மழைபெய்யின் அறம் பெருகும், மழைபெய்யின் குளம் நிறையும்.

மழைபெய்ய எழுந்தது, மழைபெய்யக் குளம் நிறைந்தது.

மழைபெயற்கு எழுந்தது, மழைபெயற்கு மாதவர் அருளினார்.

சாத்தன்   தான்   உண்டபின்   வந்தான்,   சாத்தன்   உண்டபின்
கொற்றவன் வந்தான்.

சாத்தன்  தான்   உண்ணாமுன்  வந்தான்,  சாத்தன்  உண்ணாமுன்
கொற்றன் வந்தான்.

சாத்தன் தான்  உண்டக்கால் வரும், சாத்தன் உண்டக்கால் கொற்றன்
வரும்.

சாத்தன்  தான்  உண்டக்கடை  வரும், சாத்தன் உண்டக்கடை வரும்
கொற்றன்.

சாத்தன் தான்  உண்டவழிவரும்,  சாத்தன்  உண்டவழிக்  கொற்றன்
வரும்.

சாத்தன்  தான்  உண்டவிடத்து வரும், சாத்தன்தான் உண்டவிடத்துக்
கொற்றன் வரும்.

என இருவழியும் ஒட்டுக.

எடுத்தோதாத  பிற  வாய்பாட்டிற்கும்  உண்பான்  வந்தான், சாத்தன்
உண்பான், கொற்றன் வந்தான் என்றாற்போல ஒட்டுக.

இவ்வெச்சங்களுள் குறிப்புள்ளவற்றிற்கும் இவ்வாறு கொள்க.    (34)

வினையெச்சங்கள் அடுக்கியபோது முடியுமாறு
 

235. பன்முறை யானும் வினையெஞ்சு கிளவி
சொன்முறை முடியா தடுக்குந வரினும்
முன்னது முடிய முடியுமன் பொருளே.
 

என் -  எனின்,  இவ்வெச்சங்களுள்  எடுத்தடுக்கியவழிப் படுவதோர்
முறைமை உணர்த்துதல் நுதலிற்று.