சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

182

இவ்விருமை எச்சமும் எதிர்மறுத்து மொழியினும்
பொருள்நிலை திரியா எனல்
 

238. பெயரெஞ்சு கிளவியும் வினையெஞ்சு கிளவியும்
எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா.
 

என் - எனின்,  பெயரெச்சமும்   வினையெச்சமும்  தனித்தனி முடியு
மாறு கூறிவிட்டு, இனி அவ்விரண்டற்கும் உடனெய்துவது   ஓரிலக்கணம்
உணர்த்துதல் நுதலிற்று

(இ - ள்.) பெயரரெச்சமாகிய     சொல்லும்,     வினையெச்சமாகிய
சொல்லும்  தொழிலினை   எதிர்மறுத்துச்   சொன்னவிடத்தும்  அவ்வச்
சொல்லாதற்பொருண்மை நிலையில் வேறுபடா, (எ - று.)

(எ - டு.) உண்ணும்  சாத்தன்  என்பது  உண்ணாச்  சாத்தன்  என
வரும்.  செய்த   என்பதற்கு  இதுவே   மறை   கரியசாத்தற்குச் செய்ய
சாத்தன்  எனவும்,  தீய  சாத்தன்   எனவும்  வரும்.  பெயரச்சக்குறிப்பு
மறைவிகற்பமும் அறிக. இம்மறைக் கண்  உண்ணாசாத்தன்  என ஆகார
ஈறாறே நிற்கும், இவை பெயரச்சம்.

இனி,   வினையெச்சம் உண்டுவந்தான் என்பது, உண்ணாது வந்தான்
எனவரும்.  இவ்வெச்சம்  சோறு   உண்டாயிருந்தது   எனவும்,  சோறு
ஆவதாயிருந்தது  எனவும் ஓர் சொல்லடுத்தபோது  சோறின்றி  எனவும்
வேறு   குறிப்பு    வாய்பாட்டதாம்  எனக்  கொள்க  செய்யூ,   செய்பு
என்பனவற்றிற்கும் இதுவே மறை.

இனிச்     செய்தென   என்பது   முதல்வினையோடு   முடிந்தவழி
இம்மறையானே  வரும்.  மழை   பெய்தென    மரங்குழைத்தது  எனப்
பிறவினையாய  வழிச்  செய்தென்  எச்சத்து   எதிர்மறையே    தனக்கு
மறையாய், மழைபெய்யாமல் மரங்குழையாதாயிற்று எனவரும்.

இனிச் செய்யியர்  செய்யிய  என்பன   இரண்டற்கு   மறைபடுவழித்
தன்வினை  பிறவினை  என்னும்  இரு வழியுஞ்  செயவென்னெச்சத்தின்
மறையானே  முடியும்.   மழைபெய்யாமல்   எழுந்தது,  மழைபெய்யாமல்
மரம்  குழையாதாயிற்று.  இனிச்   செய்யிய   என்பதற்கும்   இவ்வாறே
கொள்க.

செயின்   என்பதற்குச்    சொற்றன்னான்     மறையின்றி    மழை
பெய்யாவிடின்   அறம்பெறாது,   மழைபெய்யாவிடின்   மரங் குழையாது
எனப் பிற சொல்லானே மறையாய் வரும் போலும்.