சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

184

மற்று     இவ்விரவுவினை   வினைமுற்றாய்  அவற்றில் தனக்கேற்ற
வினையில்லன ஆண்டுணர்த்தும்  உயர்திணை அஃறிணை   வினையான்
மறைபடுமாறறிந்துகொள்க.                                (38)

இடைப்பிறவரல்
 

239. தத்தம் எச்சமொடு சிவணுங் குறிப்பின்
எச்சொல் லாயினும் இடைநிலை வரையார்.
 

என்  -   எனின்,   இதுவும்  அவ்வெச்சங்களிடை  நிகழும்  முடிபு
வெற்றுமை உணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.)  முன்  கூறிய  பெயரெச்சமும்  வினையெச்சமும்  தத்தம்
எச்சமாகிய    பெயரோடும்   வினையொடும்     பொருள்    இயையும்
கருத்தினையுடைய  பெயர்   முதலிய எவ்வகைச்   சொல்லாயினும் அம்
முடிதற்கு  இடை  நிற்றலை   நீக்கார்   ஆசிரியர்  எனவே கொள்வார்
என்றவாறு.

வரையார்  என்றமையின்  இதுவும்  ஓர் மரபு வழுவமைதி நீர்மைத்து
என்பது போந்தது.

சிவணுங்  குறிப்பு  என்றமையின்  சிவணாக்குறிப்பின்  வரையப்படும்
என்பது.

(எ - டு.)  அடுஞ்செந்நெற்சோறு  அட்டசெந்நெற்சோறு  எனவரும்.
இவை பெயரெச்சம்.

“உப்பின்று  புற்கையுண்கமா,    கொற்கை    யோனே”    என்பது
வினையெச்சம்.

சிவணாக்குறிப்பினது  வல்லமெறிந்த   நல்லிளங்   கோசர்   தந்தை
மல்லல் யானைப் பெருவழுதி என்பது.

இனி  ஒன்றென  முடித்தல்  என்பதனான் உண்டான் பசித்த சாத்தன்
என்றாற் போல வரும் முற்று இடைக் கிடப்புங்கொள்க.           (39)

செய்யுள் என்னும் சொல் ஈறு கெடுமாறு
 

240. அவற்றுள்,
செய்யும் என்னும் பெயரெஞ்சு கிளவிக்கு
மெய்யொடும் கெடுமே ஈற்றுமிசை உகரம்
அவ்விடன் அறிதல் என்மனார் புலவர்.
 

என்  -  எனின்,    இவ்வெச்சங்களுள்      செய்யும்     என்னும்
பெயரெச்சத்திற்கு ஈறு வேறுபட்டுக் கெடுமாறு உணர்த்துதல் நுதலிற்று.