சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

197

இவ்வாறு   பொருளுணர்த்தலும்   அவ்விடைச்    சொற்காவதோர்
இலக்கணம் என்பது. அவ்விதாரணம் உரையிற் கொள்ளப்படும்.

(எ - டு.)  ‘சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே’      (புறம். 235)

இது கழிவு.

பண்டு     காடுமன் ; இஃது  ஆக்கம். பண்டு  காடு  என்பதன்றோ
இன்றுநாடு  என்று  ஆக்கமணர்த்துகின்றது  எனின்,  அதன் பொருளை
இதுவுங் கூடிநின்று உணர்த்திற்று என உணர்க.

பண்டு  கூரியதோர்  வாண்மன் ;  இஃது ஒழியிசை. இன்றோர் குறை
பாடுடைத்தாயிற்று  என்னுஞ்   சொல்     ஒழிந்தமை    தோற்றுவித்து
நின்றமை காண்க.                                         (4)

‘தில்’ என்னுஞ் சொல்
 

255. விழைவே காலம் ஒழியிசைச் கிளவியென்(று)
அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ -  ள்.)  விழைவின்  கண்ணதும்,    காலத்தின்    கண்ணதும்,
ஒழியிசைக்கண்ணதும்  என  மூன்று  கூற்றதாம் என்ப ‘தில்’  என்னும்
இடைச்சொல்.

(எ - டு.)  “வார்ந்திலங்கு  வையெயிற்றுச்  சின்மொழி, யரிவையைப்
பெறுகதில் லம்ம யானே” (குறுந் - 14) இது விழைவு.

“பெற்றாங்  கறிகதில் லம்மஇவ்  வூரே”  என்பது  காலம். “வருகதில்
அம்மவெஞ்சேரி சேர” என்பது ஒழியிசை.                      (5)

‘கொன்’ என்னுஞ் சொல்
 

256. அச்சம் பயமிலி காலம் பெருமையென்(று)
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.
 

என் - எனின், இதுவும் அது.

(இ - ள்.)   அச்சத்தின்கண்ணும்,          பயனின்மைக்கண்ணும்,
காலத்தின்கண்ணும்,  பெருமைக்கண்ணும்  என  அக்கூறு    நான்காம்
கொன்னைச் சொல், (எ - று.)

(எ - டு.)  ‘கொள்முனையிரவூர்’  (குறுந் - 91)  என்பது    அச்சம்.
கொன்னே    வந்தான்    என்பது   பயனின்மை.  “கொன்வரல்வாடை
நினதெனக்கொண்டேனோ”   என்பது   காலம்.  ‘கொன்னூர் துஞ்சினும்
(குறுந் - 138) என்பது பெருமை.                              (6)