சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

200

இனி வினா - நீயே கொண்டாய்.
இனிப் பிரிநிலை - அவனே கொண்டான்.
இனி எண் - நிலனே நீரே தீயே வளியே.

இனி  ஈற்றசை - கடல்  போல்  தோன்றல காடிறந்தோரே. ஈற்றசை
என்றமையான் மொழி முதற்கண் அசையாகாது என்பது.           (9)

‘என’ என்னும் இடைச் சொல்லின் பொருள்
 

260.

வினையே குறிப்பே யிசையே பண்பே
எண்ணே பெயரோ டவ்வறு கிளவியுங்

கண்ணிய
1நிலைத்தே யெனவென் கிளவி.
 

என் - எனின், இது பொருள்படுவதொன்றுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) முன்னின்ற  வினைச்சொல்லைப்  பின்வரும்    வினைச்
சொல்லோடு    இயைவித்தலென்னும்    பொருண்மையும்,    குறிப்புப்
பொருண்மைக்கண் வரும் உரிச்சொல்லினைப்  பின்வரும்  சொல்லோடு
இயைவித்தலென்னும்    பொருண்மையும்,  இசைப்பொருட்கண்  வரும்
உரிச்சொல்லினைப்  பின்வரும்    சொல்லோடு   இயைவித்தலென்னும்
பொருண்மையும்,    பண்புப்பொருட்கண்   வரும்  உரிச்சொல்லினைப்
பின்வரும்           சொல்லோடு             இயைவித்தலென்னும்
பொருண்மையும்..............................                              (10)

ஏழாவது இடையியல் முற்றும்

தொல்காப்பியம்  சொல்லதிகாரம்

கல்லாடனார் உரை

முற்றும்.


1. “நிலத்தே” என்பது சேனாவரையர் மட்டும் கொண்ட பாடம்..