யெனினும் இவையெல்லாம் எழுத்தொடு புணர்ந்து பொருளறிவுறுக்கும் ஓசைமேல் நிற்கும். எனவே, எழுத்தோடு புணராது பொருளறிவுறுக்கும் ஓசையும் உளவோ எனின், உள; அவை 1முற்கும் வீளையும் இலதையும் அனு கரணமும் என்றித்தொடக்கத்தன. அவை சொல்லெனப்படா. பொரு ளறிவுறுக்கும் எழுத்தொடு புணராவோசைமேலதன்று ஆராய்ச்சி. எனவே எழுத்தல்லோசையும், எழுத்தொடுபுணராது பொருள் அறி விக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்து பொருளை அறிவிக்கும் ஓசையும், எழுத்தொடு புணர்ந்தே பொருளை அறிவுறுத்தாது இறிஞி மிறிஞி யென்றாற்போல வரும் ஓசையும் என ஓசை நான்கு வகைப் படும். அந்நான்கனுள் பின்னின்றி விரண்டும் இவ்வதிகாரத்து ஆராயப் படுகின்றன. மேலதிகாரத்தோடு இவ்வதிகாரத்திடை இயைபு என்னையோ வெனின் மேற்பாயிரத்துள் எழுத்துஞ் சொல்லும் பொருளும் என நிறுத்தார். நிறுத்தமுறையானே எழுத்துணர்த்திச் சொல்லுணர்த்திய வெடுத்துக்கொண்டார் என்பது. எழுத்தொடு சொல்லிடை வேற்றுமை என்னையெனின், தன்னை யுணர்த்திநின்றவழி எழுத்தெனப்படும்; தான் இடை நின்று பொரு ளுணர்த்தியவழிச் சொல்லெனப்படும். இம்முதலோத்து என்னுதலி யெடுத்துக் கொள்ளப்பட்டதோ வெனின், ஓத்து நுதலியதூஉம் ஓத்தினது பெயருரைப்பவே விளங்கும். இவ்வோத்தென்ன பெயர்த்தோவெனின், கிளவியாக்கமென்னும் பெயர்த்து. கிளவி என்பது சொல்; ஆக்கம் என்பது சொற்கள் பொருள்கண் மேலாமாறு. சொற்கள் பொருள்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்கமென்னும் பெயர்த்து. ஒருவன் மேலாமாறு இது, ஒருத்தி மேலாமாறு இது, பலவற்றின் மேலாமாறு இது, வழுவமையுமாறு இது எனப் பொருட்கண் மேலாமாறு உணர்த்தினமையின் கிளவியாக்க மென்னும் பெயர்த்தாயிற்று. மற்று, ஏனையோத்துக்களுள்ளும் பொருட்கண் மேலாமாறேயன்றோ உணர்த்தினது; மாறுணர்த்தியதில்லை யெனின், ஏனையோத்துக்களுட் பொருட்கண்மேலாய் நின்றவற்றிலக்கண முணர்த்தினார்; ஈண்டு அவைதம்மை யாமா றுணர்த்தினார் என்பது. மற்றுப் பெயர்ச்சொல்லும், வினைச்சொல்லும், இடைச்சொல்லும், உரிச்சொல்லுமெனச்சொல்லும் நான்கேயாதலான் ஓத்தும் நான் கேயாகற்
1. முற்கு - முக்குதலின் ஒலி. வீளை - நாக்கைமடித்துச் செய்யப்படும் சீழ்க்கை என்னும் ஒலி. ‘சிட்டி’ என வழங்கும். இலதை - அடி நாவடியிற் காட்டப்பெறும் ஒலிக்குறிப்பு என்பர் இராமாநுச கவிராயர். அனுகரணம் ‘குளுகுளு’ ‘கடகட’ என்றாற்போல ஒன்றன் ஒலிபோன்ற ஒலி. |