சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

6

ஈண்டும் என்மனாரென்பது மேற்சொல்லியவாறே நின்றதெனவுணர்க.

அவரல வென்பது  நீக்கப்  பொருண்மைக்கண்   தொக்க   ஐந்தாம்
வேற்றுமைத்  தொகை.  அலபிற  என்பது   அல்லவாகியபிற  என இரு
பெயரொட்டுப்  பண்புத்தொகை  யென  வுணர்க.  பிறவற்றை  என்னும்
இரண்டாம் வேற்றுமை இறுதிக்கண் தொக்கு நின்றது.1

அவரல்ல என்னாது  பிறஎன்றது    அஃறிணை     உயிருடையனம்
உயிரில்லனவும் என இருகூறாய்,  அவ்விரு  கூறும் தத்தம்  வகையானும்
வேறுபட்டு நின்றமை விளக்கிய வென்பது. ஏ என்பது ஈற்றசை.

அ என்னும்  சுட்டு   “நீட     வருதல்    செய்யுளுள்   உரித்தே”
யென்பதனான்    நீண்டு,     பிறவும்    வேண்டும்    செய்கைப்பட்டு,
ஆயிருதிணையென நின்றது.

இருதிணை என்பதனோடு  அவ்வென்பது   பெயர்பற்றிவந்த  தத்தங்
குறிப்பிற்    பொருள்   செய்யும்    இடைச்சொல்லென்பது    அல்லது
மூவகையுட்    சொல்லியைபு    கூறப்படாது.    இருதிணை    என்பது
இரண்டாகிய திணை யென இருபெய ரொட்டுப் பண்புத்தொகை.

பிற என்பதனோடு  ஆயிருதிணை யென்பதூஉம் பொருட்படையாகிய
வினைமுடிவின்கண் வந்தாதகலிற் சொல்லியைபு இன்றென்பது.

திணையென்பதனோடு இசைக்கும்   என்பது   தொகை   நிலையான்
வந்தது.  தொகையுள்  இரண்டாம்   வேற்றுமைத்தொகை  பொருள்நிற்ப
வுருபு தொகுதலின் உருபுத்தொகை யெனப்படும்.

இனி   ‘பெயரும்    தொழிலும்’     என்றெழுந்த    பொதுவிதியை
இரண்டாவதற்கு  விலக்கிச்  ‘சாரியை  யுள்வழித்  தன்னுருபு நிலையலும்’
என்று  சிறப்புவிதி யோதுதலின் செய்யுள்  விகாரத்தாற்  சாரியை  நிற்ப,
உருபு தொக்கது போலும். ஆயிருதிணையையும் என்னும்  முற்றும்மையும்
செய்யுள் விகாரத்தாற் றொக்கது.

இசைக்கும்  என்பது  செய்யுமென்னு  முற்றுச்சொல். அது பின் நின்ற
சொல்லென்பதனோடு பயனிலை வகையான் வந்தது.

“இசைப்பு  இசையாகும்”    என்பதனான்    இசைக்கும்   என்பதன்
பொருள்      ஒலிக்குமென்பதே        யாயினும்,      சொல்லிற்குப்
பொருளுணர்த்தும்  வழியல்லது  ஒலித்தல்   கூடாமையின்,   உணர்த்து
மென்னும்  தொழிலை   இசைக்குமென்னும்  தொழிலாற்  கூறியவாறாகக்
கொள்க. இதுவுமோர் மரபுவழுவமைதி போலும்.

பொருளை உணர்த்ததுவான்   ஒரு   சாத்தனேயெனினும்  அவற்கது
கருவியாக     அல்லது     உணர்த்தலாகாமையின்     அக்கருவிமேல்
தொழிலேற்றிச்   சொல்   உணர்த்தும்  என்று   கருவி   கருத்தாவாகச்
சொல்லிற்றாக உணர்க.


1. உரியியல் 12 ஆம் நூற்பா.