சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

9

முன்னின்ற சுட்டிய  வென்பது  செய்யிய   என்னும்  வினையெச்சம்.
அதற்கு  வினை  ‘திரிந்த’  என்னும் பெயரெச்சம்,  பின்னின்ற  சுட்டிய
வென்பது செய்த என்னும் பெயரெச்சம்.

உயர்திணை மருங்கின்  பெண்மை  சுட்டிய ஆண்மை திரிந்த பெயர்
நிலைக்   கிளவியும்   என   மொழிமாற்றாகக்   கொள்க.  உயர்திணை
மருங்கின்  என்னும்  ஏழாவதற்குப்   பெயர்நிலைக்கிளவி   என்பதனை
முடிவாக்கி,    இடைநின்ற   சொல்லைப்    பெயர்   நிலைக்கிளவிக்கு
அடையாக்கிப் பொருளு ரைத்துக் கொள்க.

இரண்டிடத்துப் பெயர்நிலைக்கிளவியுஞ்  சொல்லினாற்  பொருளறியப்
படுதலின்  பேடியுந்  தெய்வமு  மென்னும்   பொருட்கு  ஆகுபெயராய்
நின்றவென வுணர்க தெய்வமென்றது தெய்வத்தன்மையை.

இதனாற் சொல்லியது;  முன்  சொல்லிநின்று  பொருள்வரையறையுள்
அடங்காது  நின்ற  பொருளினையும்   ஒருவாற்றான்  அடங்கக்  கூறிய
வாறாயிற்று.

எனவே  உயர்   திணைப்பொருள்,   பொருள்முகத்தான்  மக்களுந்
தேவரும் நகரருமென மூன்று  கூறுபடும்.  சொல்முகத்தான்  மக்களென்ற
தன்மேற்பட்டு  ஒன்றேயாம்.  உயர்திணைப்பாலாயிற்  பொருள்முகத்தால்
ஆண்பால்,  பெண்பால், ஆணலி, பெண்ணலி,  பேடிப்பால்,  ஆண்பாற்
பன்மை,   பெண்பாற்   பன்மை,   ஆணலிப்   பன்மை,  பெண்ணலிப்
பன்மை,  பேடிப் பன்மை, ஆண்பாலோடு  பெண்பால்  கூடிய  பன்மை,
பெண்   பாலோடு   ஆண்பால்  கூடிய  பன்மை,  ஆண்பாற்   சிலர்,
பெண்பாற்   சிலர்   என   விகற்பித்து    நோக்கப்   பலவகைப்படும்.
இப்பலவகையுஞ் சொல் வகை  மூன்றல்லதின்மையின்  மூன்றே  யாயின.
இவ்வாற்றானே    தேவர்,    நரகர்     என்பனவற்றது    பாகுபாடும்
அறிந்துகொள்க.

இனி, அஃறினை   உயிருடையதூஉம்,   உயிரில்லதூஉமென  இரண்
டாய்  அவற்றுள்  உயிருடையது   ஆணும்  பெண்ணும், ஆண் சிலவும்
பெண் சிலவும், ஆண் பன்மையும்,  பெண்  பன்மையும்,  அவ்விரண்டுந்
தொக்க  சிலவும்,  அவ்விரண்டுந்  தொக்க பலவும், உயிரல்லவற்றது ஒரு
மையும்  சிலவும்  பலவும்  என இவ்வாற்றாற் பல  பகுதிப்  படுமேனுஞ்
சொல்வகை   நோக்க  இரண்டல்லது   இன்மையின்   இரண்டேயாயின
என்பது. இனி மக்கண் முதலியவற்றின் வேறுபாடும் அறிந்துகொள்க.(4)

ஆண்பால் ஈறு
 

5.

னஃகான் ஒற்றே ஆடூஉ வறிசொல்.
 

என் - எனின்    நிறுத்தமுறையானே    மேற்கூறிய   உயர்திணைச்
சொல்லுள் ஆடூஉ அறிசொல்லாமாறு உணர்த்துதல் நுதலிற்று,