சொல்லதிகாரம் - கல்லாடனார் விருத்தியுரை

12

என் - எனின்     உயர்திணைச்    சொல்லாமாறுணர்த்தி,    இனி
அஃறிணைச் சொல்லாமாறுணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.) ஒன்றினை  யறியுஞ்  சொல்லாவது  த ற டக்க ளென்கிற
வொற்றுக்களை    யூர்ந்துவருகிற    குற்றியலுகரமாகிய   வெழுத்தினை
யீறாகவுடைய சொற்கள், (எ - று.)

(எ - டு) உண்டது, உண்ணாநின்றது,   உண்பது,  கரியது,  செய்யது
எனவரும்.  இவை  தகரமூர்ந்துவந்த  குற்றியலுகர  ஈற்றவாம்.  கூயிற்று,
தாயிற்று, கோடின்று, குளம்பின்று  எனவரும் :  இவை  றகரமூர்ந்துவந்த
குற்றியலுகர  ஈற்றவாம்.  குண்டுகட்டு,  கொடுந்தாட்டு  எனவரும். இவை
டகரமூர்ந்துவந்த குற்றியலுகர ஈற்றவாம்.

மற்று     ட த ற  என்று  எழுத்துக்  கிடக்கைமுறையாற்  கூறாதது
என்னை   எனின்   ,    தகரம்    மூன்றுகாலமும்,   வினைக்குறிப்புங்
கோடலான்    முன்வைக்கப்பட்டது.     றகரம்    இறந்தகாலமென்றும்,
வினைக்குறிப்புங்   கோடலான்  அதன்பின்   வைக்கப்பட்டது.   டகரம்
வினைக்குறிப்பல்லது கோடலின்மையின் அதன்பின் வைக்கப்பட்டது.

உகரத் திறுதி - உகரமாகியவிறுதி  யெனப்  பண்புத்தொகை.  அத்து:
அல்வழிச்சந்தி.  உகரவீற்றுச்சொல்லிற்கு  உகர  விறுதி  யென்பது  இரு
பெயரொட்டுப்   பண்புத்தொகை   குற்றியலுகரம்   என்பது   மெலிந்து
நின்றது.                                                  (8)

பலவின்பால் ஈறு
 

9.

அ ஆ வஎன வரூஉம் இறுதி
அப்பான் மூன்றே பலவறி சொல்லே.

 

என்  -  எனின்  அஃறிணைக்கண்  பலவறிசொல்லாமாறுணர்த்துதல்
நுதலிற்று.

(இ - ள்.) அ,  ஆ,  வ  என்று  சொல்லவருகிற இறுதிகளையுடைய
அக்கூற்று மூன்று சொல்லும், பலவற்றை யறியுஞ் சொல், (எ - று.)

(எ  - டு) உண்டன, உண்ணாநின்றன, உண்பன, குறிய, கரிய, செய்ய
என   இவைகள்   அகரவீற்றன.   உண்ணா,   தின்னா   என  இவை
ஆகாரவீற்றன. உண்குவ தின்குவ என இவை வகரவீற்றன.

அகரம்  மூன்று   காலமும்    வினைக்குறிப்பும்   கோடலின்  முன்
வைக்கப் பட்டது. ஆகாரம் எதிர்காலமாகிய ஒரு காலமே  கோடலானும்,
எதிர்   மறை   வினைக்கணல்லது   வாராமையானும்    அதன்   பின்
வைக்கப்பட்டது.

வகரமும் அகரமென  அடங்குமே  யெனினும்  அவ்  வகரம் போல
மூன்று காலத்தும் வினைக்குறிப்பின் கண்ணும் வாராது உண்டல்,