முதற் சூத்திரத்துட் கூறப்பட்ட சொல்லிலக்கணம் எட்டினுள்ளும் திணைபால் என்பனவற்று இலக்கணமே இத்துணையுங் கூறியது என வுணர்க. முன்னின்ற நான்கு சூத்திரமுந் திணையும் பாலும் சொல்லும் பொருளும் வரையறை யிலக்கணமும் கூறின எனவும், பின்னின்ற ஆறும் அத்திணையும் பாலும் உணர்த்துஞ் சொற்களின் இலக்கணங் கூறின எனவும் உணர்க. (10) பாலறி சொற்கள் தம்முள் மயங்கா எனல் |
என் - எனின் வழுக்காத்தலை நுதலிற்று, வழுக்காக்கு மிடத்து வழுவற்க என்று காத்தலும், வழுவமைக என்று காத்தலும் என இரண்டாம். அவற்றுள் இது வழுவற்க என்று காத்தல். (இ - ள்.) வினைச்சொல்லா னடங்கும் பாலறியப்பமும் பொருளும் பெயர்ச்சொல்லா னடங்கும் பாலறியப்படும் பொருளும் என இவ்விருவகைப் பொருளும் ஒன்றோடொன்றை மயங்கச் சொல்லுதல் பொருந்தா ; தத்தம் இலக்கணத்தானே சொல்லுதலுடைய, (எ - று.) (எ - டு) உண்டான் அவன், உண்டாள் அவள், உண்டார் அவர், உண்டது அது, உண்டண அவை என வரும் : இவை வினை. அவன் உண்டான், அவள் உண்டாள், அவர் உண்டார், அது உண்டது, அவை உண்டன என வரும் : இவை பெயர். பாலறி கிளவி யென்றதனை ஈண்டும் பொருள்மேற் கொள்க. அவ்வாறு பொருள் மேற் கொள்ளவே பொருள் பற்றி நிகழும் வழுவெல்லாம் படாமற் கூறுக என்பதாம். அவ்வழுக்களது பெயரும், முறையும், தொகையும் ஓரிடத்துங் கூறிற்றிலரே யாயினும் உரையிற் கோடல் என்பதனான் இச் சூத்திரத்து உரையுட் கொள்ளப்படும். அவையாவன : திணைவழூஉ, பால்வழூஉ, இடவழூஉ, காலவழூஉ, மரபுவழூஉ, செப்புவழூஉ, வினாவழூஉ என இவையாம். இவையெல்லாம் மரபுவழு என ஒன்றேயாகற்பால எனின் அவ்வாறு ஒன்றாயடங்குமே யெனினும் அம்மரபினைப் பகுத்துத் திணைபற்றிய மரபினைத் திணையென்றும், பால் பற்றிய மரபினைப் பாலென்றும், இடம் பற்றிய மரபினை இடமென்றும், காலம் பற்றிய மரபினைக் காலமென்றும் செப்பு பற்றிய மரபினைச் செப்பென்றும், வினாபற்றிய மரபினை வினா |