(எ - டு.) பார்ப்பனச்சேரி என்பது உயர்திணைக்கண் தலைமை பற்றி வந்தது. எயினர் நாடு என்பதும் குற்றிளை நாடு என்பதும் அத்திணைக் கண் பன்மை பற்றிய வழக்கு. கமுகந்தோட்டம் என்பதும் அஃறிணைக் கண் தலைமைபற்றி வந்தது. இது தானே பன்மை யுள்வழிப் பன்மை பற்றி வந்ததூஉமாம். ஒடுவங்காடு, காரைக்காடு என்பன பன்மைபற்றி வந்தன. சேரி என்பது பல குடியுஞ் சேர்ந்திருப்பது. தோட்டம் என் பது பலபொருளுந் தொக்கு நின்ற இடம். பிறவும் அன்ன. இதனாற் சொல்லியது பல பொருளும் உள்வழிப் பிறப்பதோர் பெயர்ச்சொல்லினை அப் பல பொருளினையும் உடன் கூறியன்றே கூறற்பாலது; அவ்வாறன்றி அப் பொருட்டலைமையும் பன்மையும் பற்றிச் சொல் தொகுத்திறுத்தல் கண்டு அம் மரபுவழு அமைத்தற்குக் காரணம் கூறியவாறாயிற்று. (49) ஒன்றொழி பொதுச்சொல் |
என் - எனின் ஆன் பெண் என்னும் இருபாற்கும் பொதுவாகிய பெயர்க்கண் வரும் மரபுவழுக் காத்தல் நுதலிற்று. (இ - ள்.) பெயரினும் தொழிலினும் ஆண் பெண் என்னும் இருபாற்குமுரிய பொதுமையிற் பிரிந்து, ஒரு பாற்கண்ணே நடப்பன வெல்லாம் இலக்கண முறைமையின் மயங்கின என்று மாற்றல் கூடா; யாதோ காரணமெனின் அம்மயக்கம் வழக்கின் அடிப்பட்டவதனான், (எ - று.) அப்பொதுப்பெயர், உயர்திணை, அஃறிணை, ஆண்பால் பெண்பாலெனவும் பெயர்வினையோடு வைத்துறழ எண்வகைப்படும். அவையாவன: உயர்திணைக்கண் பெயரிற்பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும், தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும், அஃறிணைக்கண் பெயரிற்பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும், ஆணொழி மிகுசொல்லும், தொழிலிற் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகுசொல்லும் என இவை. (எ - டு.) வடுகரசர் ஆயிரவர் மக்களையுடையர், பெருந்தேவி பொறையுயிர்த்த கட்டிற்கீழ் நால்வர் மக்கள் உளர் எனவும், அரசனோடு ஆயிரவர் மக்கள் தாவடி போயினார், இன்று இவ்வூரார் எல்லாந் தைநீர் ஆடுப எனவும் உயர்திணைக்கட் பெயரினும் தொழிலினும் பிரிந்த பெண்ணொழி மிகுசொல்லும் ஆணொழி மிகுசொல்லும், நம் அரசன் ஆயிரம் யானையை யுடையன், நம்பி நூறு எருமை யுடையன் எனவும், இன்று இவ்வூர்ப் பெற்ற மெல்லாம் உழவு ஒழிந்தன, இன்று இவ்வூர்ப் பெற்ற |